Categories
தேசிய செய்திகள்

“9 TO 12” பெற்றோர்கள் அனுமதித்தால்…… பள்ளிக்கு செல்லலாம்….. மத்திய அரசு அறிவிப்பு….!!

பெற்றோர்கள் அனுமதித்தால் மாணவர்கள் பள்ளிகளுக்குச் செல்லலாம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக மத்திய, மாநில அரசுகளும் சுகாதாரத்துறை அதிகாரிகளும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இதனுடைய பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக தொடர்ந்து ஊரடங்கு அமலில் இருப்பதால், பள்ளி, கல்லூரி உள்ளிட்ட கல்வி வளாகங்கள் திறக்கப்படாமல் ஆன்லைன் மூலம் மாணவர்களுக்கு அட்மிஷனும், வகுப்புகளும்  நடைபெற்று வருகின்றன.

செப்டம்பர் 30ஆம் தேதி வரை பள்ளி, கல்லூரியை திறப்பதற்கான தடை தொடரும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில் செப்டம்பர் 21 க்கு பிறகு, ஆன்லைன் வகுப்புகள் நடத்த 50 சதவிகிதம் ஆசிரியர்கள் பணியாளர்களை பள்ளிக்கு அழைக்கலாம். 9 to 12 ஆம் வகுப்பு மாணவர்கள் பெற்றோர் அனுமதியுடன் பள்ளிக்கு வந்து ஆசிரியரிடம் ஆலோசனை பெறலாம் என்று அறிவித்துள்ளது. 

Categories

Tech |