உலகளவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 2 லட்சத்துக்கு அதிகமானோர் குணமடைந்துள்ளது மக்களிடையே நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த டிசம்பர் மாதம் சீனாவின் ஹூபேய் மாகாணத்தின் வுகான் நகரில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலகின் 198க்கும் அதிகமான நாடுகளில் பரவி உலகையே கதிகலங்க வைத்துள்ளது. இந்த வைரஸ்ஸின் கொடூர தாக்குதலின் வீரியம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்வதாலும், இதற்கு மருந்து கண்டுபிடிக்க முடியாமல் இருப்பதாலும் உலக நாடுகள் இதனை கட்டுப்படுத்த முடியாமல் திணறி வருகின்றனர்.
நாளுக்கு நாள் பலி எண்ணிக்கையும் , பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே செல்கின்றது. உலகளவில் கொரோனா வைரஸ் தாக்கத்தால் 949,785 பேர் பாதித்துள்ளனர். 48,259 பேர் உயிரிழந்த நிலையில் 201,556 பேர் குணமடைந்துள்ளனர். 699,970 பேர் சிகிச்சை பெற்று வரும் நிலையில் 35,913 பேர் இக்கட்டான நிலையில் இருந்து வருகின்றனர்.
உலகளவில் கொரோனா பதித்த 2 லட்சம் பேர் குணமாடைந்தது மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதிகட்சமாக சீனாவில் 76,408 பேரும், ஸ்பெயினில் 26,743 பேரும், ஜெர்மனியில் 19,175 பேரும், இத்தாலியில் 16,847 பேரும், ஈரானில் 16,711 பேரும், பிரான்ஸ்சில் 10,935 பேரும், அமெரிக்காவில் 8,878 பேரும் குணமடைந்துள்ளனர்.