குறிப்பிட்ட காலகட்டத்தில் மட்டும் கிடைக்கக்கூடிய பழமானது பலாப்பழம் முக்கனிகளில் ஒன்றான பலாப்பழம் பலவகையான மருத்துவ குணங்களைக் கொண்டது. அவை
- கண் பார்வை திறன் அதிகரிக்க விட்டமின் ஏ சத்து நிறைந்த பலாப்பழம் உதவிபுரிகிறது.
- நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து நோய் ஏற்படுவதை தடுக்க பலாப்பழம் அவசியமான ஒன்றாக உள்ளது.
- பலாக்காயை சாப்பிட்டு வருவதால் உடலில் இருக்கும் அதிகப்படியான சூடு தணிகிறது.
- பலாக்காயை உணவில் சேர்த்துக் கொள்வதால் பித்த மயக்கம், பித்த வாந்தி போன்ற தொல்லைகள் நீங்கும்.
- புற்றுநோய் உருவாகாமல் தடுப்பதற்கு தாவர உயிர்சத்துக்கள் நிறைந்த பலாப்பழம் துணைபுரிகிறது.
- பலாப்பழம் சாப்பிட்ட பின்னர் சிறிது நெய் அல்லது பால் அருந்தி வந்தால் உடல் மேலும் வலிமை பெறும்.
- பலாப்பழத்துடன் சிறிது நாட்டுச் சர்க்கரையும் சேர்த்து சாப்பிட்டால் புத்துணர்ச்சி கிடைக்கும், தாகம் குறையும், விரைவில் ஜீரணமாகும்.