Categories
பல்சுவை

மஹாவீர் வாழ்க்கை வரலாறு…!!

சமண சமயத்தை உலகறிய செய்தவர் மகாவீரர் இவர் சமண சமய மதத்தின் இருபத்தி நான்காவது மற்றும் கடைசித் தீர்த்தங்கரர் ஆவார்

தீர்த்தங்கரர் என்றால் என்ன?

இறைவன் நிலையை பெற்றவர்கள் வழிபாட்டுக்குரியவர்கள் என்றும் சமண  சமய மதம் கூறுகின்றது. இவர்கள் ஞான நிலையை அடைந்த பின்னர் இவர்களுடைய சிலைகளை தமிழ் கோவில்களில் வைத்து அவர்களை வணங்கி வருகின்றனர்.

மஹாவீர் வாழ்க்கை வரலாறு 

மஹாவீரர் கிறிஸ்து பிறப்பதற்கு முன் 599 ஆம் ஆண்டு சித்திரை மாதம் தற்போது பீகாரில் உள்ள வைசாலி என்ற மாகாணத்தில் இருக்கும் சித்தார்த்தர் என்ற அரசர்க்கும் திரிசலாவிற்கும் மகனாக பிறந்தார். பெற்றோர்கள் இவருக்கு வைத்த பெயர் வர்த்தமானர். அரசக் குடும்பத்தில் பிறந்ததால் மிகவும் செல்வச் செழிப்புடன் வளர்க்கப்பட்டார். ஆனால் சிறு வயது முதலே ஆன்மீகத்தின் மீது ஈடுபாடும் தேடலும் இருந்துள்ளது மாவீர்க்கு.

வளர்ந்த பின்னர் யசோதை எனும் பெண்ணைத் திருமணம் செய்து கொண்டு இல்லற வாழ்க்கையில் ஈடுபட்டு வந்தார். மகாவீரருக்கு ப்ரியதர்ஷனா என்னும் மகளும் பிறந்தாள். தன்னுடைய முப்பதாவது வயதில் அரச வாழ்க்கையும் துறந்து இல்லற வாழ்க்கையையும் துறந்து துறவறம் மேற்கொண்டார். தொடர்ந்து 12 ஆண்டுகள் ஆன்மீகத் தேடலில் ஈடுபட்டு தியானம் வழிபாடு என தொடர்ந்ததால் மகாவீரர் எனும் பெயரை அடைந்தார்.

ஞானம் பெற்ற மஹாவீர்

சமண சமயத்தை பரப்புவதற்காக இந்தியா முழுவதும் ஆன்மீகப் பயணம் மேற்கொண்டு வந்தவர் மகாவீரர். இவரது எளிமையான பேச்சைக் கேட்டு அனைத்து மக்களும் கூட்டம் கூட்டமாக வந்து இவரது பேச்சைக் கேட்க காத்திருந்தனர். இவருடைய காலகட்டத்தில்தான் சமண சமயத்தின்  கருத்துக்கள் இந்தியாவெங்கும் பரவியது. 30 வயதில் துறவறம் பூண்ட மகாவீரர் தனது நாற்பத்தி இரண்டாவது வயதில் சாலா மரத்தடியில் ஞானம் பெற்றுள்ளார்.

 

By inza dev

IF YOU WANT TO KNOW MEANS THEN TRY TO FIND ME AND ASK ME

Categories

Tech |