கும்பம் ராசி அன்பர்களே..! இன்று சான்றோர்களின் சந்திப்பு கிடைத்து மகிழும் நாளாகவே இருக்கும். பண நெருக்கடிகள் படிப்படியாக குறையும். உடன்பிறப்புகள் கேட்ட உதவிகளை மறுக்காமல் செய்வீர்கள். வெற்றி வாய்ப்புகள் வீடு தேடி வரும். தொழில் வியாபாரம் மந்த நிலையில் காணப்பட்டாலும் வருமானம் வழக்கம் போல் இருக்கும். உங்களுக்கு வரவேண்டிய பணம் கொஞ்சம் கொஞ்சமாக வந்துசேரும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் திறமையாக செயல்பட்டு சாதகமான பலனை பெறக்கூடும்.
உங்கள் செயல்திறனை பாராட்டுகளைப் பெறுவீர்கள். குடும்பத்தில் நிம்மதி கொஞ்சம் குறையும். அதை மட்டும் கவனத்தில் கொள்ளுங்கள். கணவன் மனைவிக்கு இடையே மனம் வருந்தும் படியான சூழல் கூட வரலாம். வீடு வாகனங்களுக்கான செலவு கொஞ்சம் இருக்கும். பிள்ளைகளுக்காக கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். அவர்களுடைய நலனில் கொஞ்சம் அக்கறை செலுத்துவது ரொம்ப நல்லது. பெண்களுக்கு எதிர்பாராத சில சந்திப்புகள் ஏற்படும், பார்த்துக்கொள்ளுங்கள். திடீர் செலவு அதனால் ஏற்படும்.
உறவினர்களின் மத்தியில் கொஞ்சம் நீங்கள் கௌரவிக்க படுவீர்கள். இன்று முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது வெள்ளை நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. வெள்ளை உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அதுமட்டுமில்லை இன்று இல்லத்தில் அம்மன் வழிபாட்டை மேற்கொள்ளுங்கள், காரியங்கள் ரொம்ப நல்லபடியாகவே நடக்கும்.
அதிர்ஷ்டமான திசை: கிழக்கு
அதிர்ஷ்ட எண்: 6 மற்றும் 8
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை மற்றும் நீல நிறம்