மகரம் ராசி அன்பர்களே…! இன்று முதலீடுகளை செய்து முன்னேற்றத்தை வரவழைத்துக் கொள்ளும் நாளாகவே இருக்கும். கையில் காசு பணப்புழக்கம் கொஞ்சம் புழங்கும். செய்யும் காரியங்களில் உங்களுடைய திறமை வெளிப்படும். சகோதரர் வழியில் ஆதாயம் கிடைக்கும். பங்குச்சந்தையில் உள்ளவர்களுக்கு ஓரளவு முன்னேற்றமான சூழல் அமையும். வியாபாரம் தொடர்பான செலவு கூடும். வாக்குவாதம் ஏற்பட வாய்ப்பு இருப்பதால் பணியாளர்கள் இடமும் குடும்பத்தாரிடமும் கொஞ்சம் கவனமாகவே பேசுங்கள்.
உத்தியோகத்திலிருப்பவர்கள் கூடுதல் கவனத்துடன் செயல்பட வேண்டும். சக பணியாளர்களின் வேலைகளுக்கு உங்கள் உதவி தேவைப்படும். குடும்பத்தில் இதமான சூழ்நிலை எழுவதற்கு உங்கள் பேச்சில் கவனம் இருக்கட்டும். உங்களுடைய கருத்துக்கு மாற்று கருத்து தெரிவிக்கக் கூடும் பார்த்துக்கொள்ளுங்கள். கணவன் மனைவிக்கு இடையே மகிழ்ச்சி இருக்கும், பிரச்சனை இல்லை. குழந்தைகளின் செயல்பாடுகள் மனதிற்கு திருப்தியை கொடுக்கும். இன்று சமூக சிந்தனை கூடும் நாளாகவே இருக்கும்.
சமூகத்தில் உள்ளவர்களுக்கு நீங்கள் உதவிகளைச் செய்வீர்கள். பெண்களுக்கு வீண் அலைச்சலும் காரிய தாமதம் ஏற்படலாம், பார்த்துக்கொள்ளுங்கள். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது ஆரஞ்சு நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. ஆரஞ்சு உங்களுக்கு அதிர்ஷ்டத்தையும் கொடுக்கும். அதுமட்டுமில்லை இன்று இல்லத்தில் அம்மன் வழிபாட்டை மேற்கொள்ளுங்கள், காரியங்கள் அனைத்தும் ரொம்ப நல்லபடியாகவே நடக்கும்.
அதிர்ஷ்டமான திசை: தெற்கு
அதிர்ஷ்ட எண்: 7 மற்றும் 9
அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு மற்றும் நீல நிறம்