மாணவர்களுக்கு ஆன்லைனில் பாடம் நடத்த பேராசியர்களுக்கு சென்னை பல்கலைக்கழகம் உத்தரவிட்டுள்ளது. கூகுள் டிரைவ், வாட்ஸ்ஆப், ஜி-மெயில், ஸ்கைப் உள்ளிட்ட செயலிகள் மூலம் பாடம் நடத்த பேராசியர்களுக்கு சென்னை பல்கலைக்கழகம் உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பான அறிக்கையை சென்னை பல்கலைக்கழகத்திற்கு உட்பட்ட கல்லூரி முதல்வர்களுக்கு பல்கலைக்கழகம் உத்தரவிட்டுள்ளது.
அதில், செமஸ்டர் தேர்வுகளுக்கு மாணவர்களை தயார்படுத்தும் வகையில் ஆன்லைனை பயன்படுத்தி பேராசிரியர்கள் மாணவர்களுக்கு பாடம் நடத்தலாம் என்றும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக தற்போது அனைத்து கல்வி நிறுவனங்களும் இந்தியாவில் மூடப்பட்டுள்ளன.
அனைத்து பள்ளிகளும் குறிப்பிட்ட காலத்திற்கு மூடப்பட்டுள்ளன மேலும் பல்வேறு மாநிலங்களில் பள்ளி மாணவர்கள் தேர்வு இல்லாமல் அடுத்த வகுப்புகளுக்கு உயர்த்தப்பட்டுள்ளனர். இதையடுத்து கல்லூரி நிறுவனங்களும் மூடப்பட்ட நிலையில், தற்போது சென்னை பல்கலைக்கழகம் மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் பாடங்கள் நடத்தப்பட வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.