Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

தனுசு ராசிக்கு…திட்டமிட்ட காரியங்கள் வெற்றியாகும்…வாகன பராமரிப்பு செலவு குறையும்..!!

தனுசு ராசி அன்பர்களே..! இன்று திட்டமிட்ட காரியங்களில் வெற்றி கிடைக்கும் நாளாகவே இருக்கும். வாகன பராமரிப்பு செலவு குறையும். தாய் வழியில் ஏற்பட்ட தகராறு விலகிச்செல்லும். இட மாற்றங்கள் நிகழும், அதேபோல எதிரிகள் விலகிச்செல்வார்கள். லாபம் படிப்படியாக உயரும், பழைய பாக்கிகளும் வசூலாகும். வியாபாரத்திலிருந்த இடையூறுகள் விலகும். வியாபார வளர்ச்சி பற்றிய சிந்தனை தோன்றும். அரசாங்கத்தில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலைப்பளு அதிகரிக்கும்.

அலுவலகப் பணிகளில் கூடுதல் கவனமுடன் செய்வது நல்லது. குடும்பத்தில் இருப்பவர்களின் செய்கையால் மன உளைச்சல் கொஞ்சம் ஏற்படலாம். கணவன் மனைவிக்கு இடையே வாக்கு வாதங்கள் வரலாம், எதையும் பேசி தீர்த்துக் கொள்ளுங்கள். பிள்ளைகளுடன் சகஜமாக பேசிக் கொள்வது நல்லது. பிள்ளைகளைத் தயவுசெய்து அதட்டாமல் பேசுங்கள். அவர்களுடைய நலனில் கொஞ்சம் அக்கறை காட்டுங்கள். பெண்களுக்கு சமையல் செய்யும் பொழுது கவனம் இருக்கட்டும். எதிலும் எச்சரிக்கையுடன் நடந்து கொள்வது நல்லது.

இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது வெள்ளை நிறத்தில் ஆடை அணிந்து கொள்வது ரொம்ப நல்லது. வெள்ளை உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்க கூடிய அளவில் இருக்கும். அதுமட்டுமில்லாமல் இல்லத்தில் அம்மன் வழிபாட்டை மேற்கொள்ளுங்கள், காரியங்கள் அனைத்துமே நல்லபடியாகவே நடக்கும்.

 அதிர்ஷ்டமான திசை: கிழக்கு

அதிர்ஷ்ட எண்: 3 மற்றும் 5

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை மற்றும் இளம் மஞ்சள் நிறம்

Categories

Tech |