தேவையான பொருட்கள் :
பெரிய எலுமிச்சைப்பழம் – 3,
இஞ்சிச் சாறு – 1 கப்,
தக்காளிச் சாறு – 1/2 கப்,
தேன் – 2 டீஸ்பூன்,
சர்க்கரை – 1 ள்ஸ்பூன்,
உப்பு -1 தேவையான அளவு.
செய்முறை :
முதலில் நன்கு பழுத்த எலுமிச்சைப்பழத்தைப் பிழிந்து சாறு எடுத்து வைத்து கொள்ளுங்கள். பின்னர் தக்காளி, இஞ்சி சாறு கலந்து, சர்க்கரைப் போட்டு தேவையான அளவு தண்ணீர் ஊற்றிக் கொள்ளவும். அத்துடன் உப்பு சேர்த்து நன்றாகக் கிளறி, தேன்விட்டு பருகவும். தண்ணீருக்கு பதில் வேக வைத்த புதினா நீர் சேர்த்துக் கொள்ளலாம். பித்தம், வாத நோய்க்கு இது சிறந்த நிவாரணம் அளிக்கும். மேலும் ரத்தத்தை சுத்திகரிக்க உதவுகிறது.