சிம்மம் ராசி அன்பர்களே..! இன்று தன்னம்பிக்கை அதிகரிக்கும் நாளாகவே இருக்கும். விலகிச் சென்ற உறவினர்கள் விரும்பி வந்து சேர்வார்கள். திருமண பேச்சுகள் நல்ல முடிவை கொடுப்பதாகவே இருக்கும். கொடுக்கல்-வாங்கல் சீராகும். வரவு திருப்திகரமாக இருக்கும். எண்ணிய காரியங்கள் எண்ணிய படியே நடக்கும். எந்த ஒரு விஷயத்தையும் நீங்கள் திறமையாகவே செய்வீர்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைத்தாலும் கொஞ்சம் அதிகமாக உழைக்க வேண்டியிருக்கும்.
சரக்குகளை அனுப்பும் பொழுது கொஞ்சம் கவனம் இருக்க வேண்டும். இன்று எந்த ஒரு சூழ்நிலையிலும் பெரியோர்களிடம் கொஞ்சம் ஆலோசனை கேட்டு காரியங்களைச் செய்யுங்கள் உழைப்புக்கு ஏற்ற அங்கீகாரம் கிடைக்கும். எதைப்பற்றியும் தயவுசெய்து கவலை கொள்ளாதீர்கள். எதிர்கால முன்னேற்றத்திற்கு எந்த ஒரு விஷயமும் உங்களுக்கு தடையில்லாமல் செல்லும் குடும்பத்தில் ஏதாவது சிறு சிறு சண்டைகள் அவ்வப்போது ஏற்படலாம். கணவன் மனைவி ஒருவரை ஒருவர் விட்டுக் கொடுத்துச் செல்வது நல்லது. பிள்ளைகளிடம் அன்பாக நடந்து கொள்ளுங்கள், பிள்ளைகள் பற்றிய கவலை உங்களுக்கு அதிகமாகவே இருக்கும்.
சகோதரர்கள் தகப்பனாரிடம் வீண் வாக்குவாதங்கள் ஏதும் செய்யாதீர்கள் பெண்களுக்கு மனதில் இருந்த சோர்வு நீங்கி உற்சாகம் பிறக்கும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது ஆரஞ்சு நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. ஆரஞ்சு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தைக் கொடுக்கும். அதுமட்டுமில்லை இன்று வெள்ளிக்கிழமை என்பதால் அம்மன் வழிபாட்டை மேற்கொள்ளுங்கள் காரியங்கள், ரொம்ப நல்லபடியாகவே நடக்கும்.
அதிர்ஷ்டமான திசை: தெற்கு
அதிர்ஷ்ட எண்: 7 மற்றும் 9
அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு மற்றும் மஞ்சள் நிறம்