Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

கடகம் ராசிக்கு… சொல்லும் சொற்கள் வெல்லும் சொற்களாக மாறும்..சிந்தனை திறன் அதிகரிக்கும்..!!

கடகம் ராசி அன்பர்களே..! இன்று சொல்லும் சொற்கள் வெல்லும் சொற்களாக மாறும். தன லாபம் எதிர்பார்த்தபடி வந்து சேரும். பூர்வீக சொத்துக்களை விற்று புதிய சொத்துக்களை வாங்கலாம் என்ற சிந்தனை இருக்கும். எதிர்பார்த்த லாபம் எளிதில் வந்து சேரும். அலுவலக விவகாரங்களில் சாமர்த்தியமாக காய் நகர்த்தி கச்சிதமாக அனைத்து விஷயத்தையும் செய்து முடிப்பீர்கள். எல்லாவற்றையும் இன்று திறமையாகவே சமாளிப்பீர்கள். மேலிடத்தில் மனம் விட்டு பேசுங்கள், கருத்து வேற்றுமை ஏற்படாமல் பேசுவது ரொம்ப நல்லது.

குடும்பத்தில் அமைதி கொஞ்சம் குறையும் பிள்ளைகளால் சின்ன சின்ன பிரச்சனைகள் வந்து செல்லும். கணவன் மனைவிக்கு இடையே திடீர் கோபங்கள் கொஞ்சம் தலைதூக்கும் பார்த்துக்கொள்ளுங்கள். தேவையானவற்றை மட்டும் இன்று நீங்கள் வாங்குவது நல்லது வரவு இருந்தாலும் செலவை மட்டும் தயவு செய்து கட்டுப்படுத்திக் கொள்ளுங்கள். இன்று  உடல் ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை எந்த பிரச்சினையும் இல்லை சிறப்பாகவே இருக்கும்.

பெண்களுக்கு திட்டமிட்டபடி காரியங்கள் நடந்து முடியும் நாளாகத் தான் இன்றைய நாள் இருக்கும். இன்று நீங்கள் முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது ஊதா நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. ஊதா நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தையும் கொடுக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று வெள்ளிக்கிழமை என்பதால் அம்மன் வழிபாட்டை இல்லத்தில் மேற்கொள்ளுங்கள், காரியங்கள் அனைத்துமே ரொம்ப சிறப்பாகவே நடக்கும்.

அதிர்ஷ்டமான திசை: கிழக்கு

அதிர்ஷ்ட எண்: 2 மற்றும் 4

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு மற்றும் ஊதா நிறம்

Categories

Tech |