Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

மிதுனம் ராசிக்கு… தெய்விக நம்பிக்கை கூடும்..இல்லத்தில் நல்ல சம்பவங்கள் நடைபெறும்..!!

மிதுனம் ராசி அன்பர்களே..! இன்று தெய்வீக நம்பிக்கை கூடும் நாளாகவே இருக்கும். இல்லத்தில் நல்ல சம்பவங்கள் நடைபெறக் கூடிய சூழ்நிலை அமையும். புதிய பொருள் சேர்க்கை ஏற்படும். அன்னிய தேசத் தொடர்பு விரிவடையும். அந்நிய தேசத்தில் இருந்து நல்ல தகவல்கள் வரக்கூடும். இன்று முயற்சிகள் ஓரளவு கைகூடும். வியாபார ரீதியாக எடுக்கக்கூடிய முயற்சிகள் நல்ல பலனை கொடுத்தாலும் அலைச்சல்களும் அதிகரிக்கும் பார்த்துக்கொள்ளுங்கள். லாபம் கிடைப்பது கொஞ்சம் தாமதமான நிலையே காணப்படும்.

இன்று தொழிலில் புதிய ஆர்டர்கள் கிடைப்பதில் சின்னச்சின்ன சிக்கல்கள்  இருக்கும். தடைகளை தாண்டிதான் முன்னேறிச் செல்ல வேண்டி இருக்கும். இன்று பயணங்கள் செல்வதாக இருந்தால் கொஞ்சம் கவனமாக செல்லுங்கள். வாகனத்தில் செல்லும் பொழுது ரொம்ப கவனமாக தான் இருக்க வேண்டும். மனதில் புதுவித குழப்பங்கள் அவ்வப்போது வந்து செல்லும். தேவையில்லாத விஷயத்திற்காக நீங்கள் கவலை பட நேரிடும். எந்த ஒரு வேலையையும் முழு கவனத்துடன் செய்ய முடியாமல் இருக்கும் பார்த்துக்கொள்ளுங்கள். மனதை அமைதியாக வைத்துக் கொள்ளுங்கள்.

தியானம் போன்றவற்றில் ஈடுபடுவது ரொம்ப நல்லது. மிக முக்கியமாக அனைவரையும் அனுசரித்துச் செல்வது ரொம்ப சிறப்பு. யாரிடமும் தயவுசெய்து கோபம் கொள்ளாதீர்கள், கணவன்-மனைவிக்கு இடையே இன்று அன்பு இருக்கும், பிரச்சனை இல்லை. பிள்ளைகளின் எதிர்காலம் குறித்த சிந்தனை இருக்கும். ஆன்மிகத்தில் நாட். இன்று முக்கியமான பணி நீங்கள் மேற்கொள்ளும் பொழுது பச்சை நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. பச்சை உங்களுக்கு அதிர்ஷ்டத்தைக் கொடுக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று வெள்ளிக்கிழமை என்பதால் அம்மன் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள், காரியங்கள் அனைத்துமே சிறப்பாகவே நடக்கும்.

அதிர்ஷ்ட திசை:-தெற்கு

அதிர்ஷ்ட எண்: 4 மற்றும் 5

அதிர்ஷ்ட நிறம்: பச்சை மற்றும் வெள்ளை நிறம்

Categories

Tech |