ரிஷபம் ராசி அன்பர்களே..! இன்று மகிழ்ச்சி கூடும் நாள் ஆகத்தான் இருக்கும். உற்றார் உறவினர்களின் வருகையும் உண்டாகும். புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டு மகிழ்வீர்கள். கட்டிட பணியை மீண்டும் தொடராமல் என்ற எண்ணம் இருக்கும், இப்போதைக்கு எதுவும் வேண்டாம். உங்களுடைய சிந்தனை திறன் இன்று அதிகமாகவே இருக்கும். ஆக்கப்பூர்வமாக நீங்கள் ஒரு யோசிப்பீர்கள். உங்களுடைய அறிவு திறமை இன்று கைகொடுக்கும். பணவரவை பொருத்தவரை தாமதப்பட்டு தான் வந்து செல்லும்.
வீண் வாக்குவாதங்களை முற்றிலும் தவிர்ப்பது ரொம்ப நல்லது. உடல் ஆரோக்கியத்தில் ரொம்ப கவனமாகவே இருக்க வேண்டும். தொழில் வியாபாரத்தில் இருந்து வந்த தொய்வு நிலை ஓரளவு மாறும் முன்னேற்றமான சூழல் அமையும். இன்று எந்த ஒரு விஷயத்தையும் செய்யும் பொழுது கொஞ்சம் கவனமாகவே செய்யுங்கள். பெரியோர்களிடம் ஆலோசனை கேட்டு செய்வது ரொம்ப நல்லது. புதிய பொறுப்புகளும் வந்து சேரும். இன்று குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலையும் அமையும். உறவினர்களின் மத்தியில் மதிப்பும் மரியாதையும் உங்களுக்கு கூடும்.
இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது மஞ்சள் நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. மஞ்சள் நிறம் அதிர்ஷ்டத்தைக் கொடுக்கும். அதுமட்டுமில்லை இன்று வெள்ளிக்கிழமை என்பதால் அம்மன் வழிபாட்டை மேற்கொள்ளுங்கள், காரியங்கள் ரொம்ப நல்லபடியாகவே நடக்கும்.
அதிர்ஷ்டமான திசை: மேற்கு
அதிர்ஷ்ட எண்: 1 மற்றும் 5
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள் மற்றும் நீல நிறம்