கொரோனாவால் பேரம் பேசும் சீனா :
உலக நாடுகளுக்கு கொரோனாவை ஏற்றுமதி செய்ய சீனா தற்போது அதிலிருந்து லாபம் பார்க்க தொடங்கியாச்சு. ஆசியா உட்பட அனைத்து நாடுகளை சேர்ந்தவர்களும் சீன எல்லைக்குள் வர தடை விதித்துள்ளார். மற்ற நாடுகளை சேர்ந்தவங்க சீனர்களுக்கு கொரோனாவை பரப்பி விடுவார்கள் என்று காரணம் சொல்றாங்க. தற்போது பாதிக்கப்பட்ட பல நாடுகளுடன் ஃபேஸ் மாஸ்க், ஹாண்ட் கிளவுஸ், வெண்டிலேட்டர் போன்ற இயந்திரங்களை உற்பத்தி செய்து அவர்களுக்கு தருவதற்கு பல கோடி ரூபாய்க்கும் பேரம் பேசிக்கிட்டு இருக்காங்க
சீனாவின் சதி :
சீனர்களின் நரி தந்திரத்தை பற்றி வெளியே இருக்கிறவங்க சொல்லும் பொழுது அதை நம்பாமல் இருப்பது பரவால்ல. ஆனால் சீனர்களே சொன்னால். 1999 ஆம் ஆண்டு அமெரிக்காவை அழிக்க சீனாவின் இரண்டு படைத்தளபதிகள் எழுதிய புத்தகம்தான் அன்று ஸ்ட்ரெக்ட்டர் வாபர். அமெரிக்காவை ஒருநாளும் ஆயிரங்களை வச்சு அழிக்க முடியாது அப்படின்னு சீன தளபதிகளுக்கு தெரியும்.அமெரிக்காவின் பொருளாதாரத்தை அழிப்பது மட்டுமே சீனா அமெரிக்காவை அளிப்பதற்கு சரியான திட்டம் என்று அந்த புத்தகத்தில் குறிப்பிட்டிருக்கு. சுமார் 20 ஆண்டுகள் கழித்து சீனா அந்த புத்தகத்தில் இருப்பது போல கொரோனாவை ஒரு ஆயுதமாக பயன்படுத்திக் கொண்டு இருக்கிறார்கள்.
உலக பொருளாதாரத்தை கட்டுப்படும் சீனா :
கொரோனவை பயன்படுத்தி உலகப் பொருளாதாரத்தை சீனா கட்டுப்படுத்தும் முயற்சியில் இறங்கி இருக்காங்க.இது வெறும் கணிப்பு மட்டும் கிடையாது. சில உதாரணங்கள் இருக்கு, தற்போது சீனாவின் நிலையில் என்ன ? உலக நாடுகளில் லாக் டவுன், முடங்கி இருக்கின்ற நேரத்தில, சீனா தன்னுடைய சுற்றுலாத்தலங்களை திறந்துடுச்சு. மால்கள், ஓட்டல்கள் என எல்லாமே வழக்கம்போல திறக்கப்பட்டு, மக்களின் இயல்பு வாழ்க்கையும் சீனாவில் திரும்பிடுச்சு. பெரும்பாலான தொழிற்சாலைகள் இயக்கத்திற்கு வந்துருச்சு. சீன அரசு 344 பில்லியன் டாலர்களை பொருளாதாரத்தை மீட்க இன்வெஸ்ட்மெண்ட் பண்ணி இருக்காங்க. ஒரு நாடு தன்னை மீட்க எடுக்குற நடவடிக்கையில் என்ன தவறு இருக்கு அப்படினு ஒரு கேள்வி எழும். இந்த புள்ளி விவரத்தை கொஞ்சம் பாருங்க.
கொரோனாவால் குறைவான பாதிப்பு :
கொரோனா உருவான சீனாவில் மொத்தமே 81 ஆயிரம் பேர்தான் கொரோனாவால பாதிக்கப்பட்டு இருக்காங்க. ஆனா அமெரிக்காவில் இன்னைக்கு வரைக்கும் கிட்டத்தட்ட இரண்டு லட்சத்து 25 ஆயிரம் பேர், இத்தாலில ஒரு லட்சத்துக்கு மேலே. அதே சீன எல்லைக்குள் இருக்கிற பீஜிங்கில் எவ்வளவு பாதிப்பு இருக்கு தெரியுமா ? இரண்டரை கோடி மக்கள் வசிக்கிற பீஜிங்கில் வெறும் 569பேருக்கு மட்டும்தான் கொரோனா பாதிப்பு. அதில் வெறும் 8 பேர் தான் இறந்து இருக்காங்க. சீனாவின் மற்றொரு முக்கியமான நகரம் ஷாங்காய். இரண்டரை கோடி மக்கள் வாழும் சாங்காய்யில் 468 பேருக்கு மட்டும்தான் கொரோனா நோய் ஏற்பட்டு இருக்கு. அதில் வெறும் 5 பேர்தான் மரணமடைந்து இருக்காங்க.
மற்ற நாடுகளுக்கு பரப்பிய சீனா :
உலகிலேயே நெருக்கமான மக்கள் தொகை வசிக்கிற நகரங்களில் ஷாங்காய்யும் ஒன்று. அந்த இடத்தில் இவ்வளவு குறைவான பாதிப்பு, ஆனால் அமெரிக்காவில் அனைத்து மாகாணத்திலும் கடுமையான பாதிப்புகள். வுகானில் இருந்து அண்டை மாநிலத்திற்கு பரவுவதை சீனா எவ்வளவு அழகா கட்டுப்படுத்துனாங்களோ , அதே மாறி மற்ற நாடுகளுக்கும் பரவுறதா கட்டுப்படுத்தி இருக்கலாமே ? தன்னுடைய எல்லைகளை சீனா ஏன் முதலேயே கட்டுப்படுத்தல .சீனாவில் பாதிப்பு ஏற்பட்ட நகரங்களின் அப்படினு பட்டியலை பார்க்கும் போது சீனாவின் பொருளாதார மண்டலங்கள் அனைத்துமே பத்திரமாக பாதுகாக்கப்பட்டு இருக்கு. முக்கிய நகரங்களுக்கு எந்த பாதிப்பும் இல்லாமல் சீனா எப்படி பார்த்துகிச்சு? இது எப்படி சாத்தியமானது.
கொரோனாவை வைத்து வர்த்தகம் செய்யும் சீனா :
இந்த கேள்வி மனசுல ஒரு பக்கம் இருந்து கிட்டே இருக்க , சீனா மற்றொரு விடையை நமக்கு சரியா கொடுத்துகிட்டு இருக்கு. இந்த கொரோனா சூழ்நிலையை சீனா தனக்கு சாதகமாக எப்படி பயன்படுத்துறாங்க தெரியுமா ? உலக நாடுகளுக்கு இப்போ என்ன தேவை ? பேஸ் மாஸ்க், ஹாண்ட் க்ளோவ்ஸ், வெண்டிலேட்டர், சனிடைசர் அதை உற்பத்தி செய்யும் வியாபாரத்தில் தான் இப்போ சீனா களமிறங்கி இருக்குனு ஒரு புள்ளி விவரம் சொல்லுது.
மருத்துவ பொருட்கள் உற்பத்தி :
2020 ஆம் ஆண்டு ஜனவரி- பிப்ரவரி காலகட்டத்தில் மட்டும் சீனாவில் 8, 950 புதிய மாஸ்க் செய்யும் தொழிற்சாலை உருவாக்கப்பட்டு இருக்கு. சீனாவின் ஒருநாள் உற்பத்தியில் எவ்வளவு தெரியுமா ? கிட்டத்தட்ட 116 மில்லியன். டான் பாலிமர் என்ற தொழிற்சாலை தான் சீனாவின் மிகப்பெரிய தொழிற்சாலை. சீனாவில் மாஸ்க் செய்யும் பங்கில் கிட்டத்தட்ட 40% பங்கு இவங்ககிட்ட தான் இருக்கு. இந்த தொழிற்சாலை தான் உலகம் முழுவதும் உள்ள பல நாடுகளுக்கு மாஸ்க் செய்யுற மூலப் பொருளை ஏற்றுமதி செய்யுது. இந்தியா மாஸ்க்கை இங்கே உற்பத்தி செய்யுது. ஆனால் அதற்கான மூலப் பொருட்கள் சீனா கிட்ட இருந்து தான் வாங்கி கிட்டு இருக்கோம்.
சீன நிறுவனங்கள் அசுரத்தனமான வளர்ச்சி :
கொரோனா ஏற்பட்ட இந்த காலகட்டத்தில் உலகின் அனைத்து நிறுவனங்களின் பொருளாதாரம் கீழே விழுந்து கொண்டிருக்கின்ற நிலையில் இந்த கம்பெனிகளின் இலாபம் 417 சதவீதம் அதிகரித்து இருக்கிறது.கொரோனா வைரஸ் இந்த 9 ஆயிரம் நிறுவனக்ளுக்கு நல்ல செய்தியாக இருக்கின்றது. ஏற்கனவே சீனாவில் இருந்த தற்போது உருவாக்கப்பட்ட அனைத்து நிறுவனங்களும் உலக நாடுகளுடன் வர்த்தக ஒப்பந்தத்தில் ஈடுபட்டுக் கொண்டு இருக்கிங்க.
பிறநாட்டின் பொருளாதாரத்தை கைப்பற்ற துடிக்கும் சீனா :
ஹேண்ட் சனிடைசர், மாஸ்க், கிளவுஸ், வென்டிலேட்டர் போன்ற இயந்திரங்கள் தயாரித்து விற்பனை செய்ய பல கோடி டாலருக்கு ஒப்பந்தம் பண்ணி இருக்காங்க. வணிகத்தை ஆளுமை செய்யுறது ஒரு பக்கம் இருந்தாலும், இன்னொரு பக்கம் பொருளாதார கைப்பற்றுவது. அந்த வகையில் உலகம் முழுவதும் இந்த காலகட்டத்தில் பல நிறுவனங்கள் நொடிஞ்சு போச்சு, நஷ்டத்தில் இருக்கு. அந்த நிறுவனங்களை விலை கொடுத்து வாங்க சீனா தொடங்கிட்டாங்க. ஆஸ்திரேலிய அரசு தற்போது பயந்துகிட்டு இருக்காங்க. சீனா பல மில்லியன் டாலரை தற்போது ஆஸ்திரேலிய நிறுவனம் மீது முதலீடு செய்யுராங்க இது ஒரு காலகட்டத்தில் ஆஸ்திரேலியாவின் மொத்த பொருளாதாரமும் சீன நிறுவனங்களின் கையில் போய்விடுமோ ? என்ற பயணத்துல ஆஸ்திரேலிய அரசு இருக்கு.
சீனாவின் வியாபார தந்திரம் :
சீன நிறுவனங்களை தாண்டி சீன எல்லைக்குள் இருக்கும் மற்ற நாடுகளின் நிறுவனங்களும் பிப்ரவரி மாசமே இயங்க தொடங்கிட்டாங்க. பிஎம்டபிள்யூ, FIAT, FOXCONN, TESLA பேன்ற கார் நிறுவனங்கள் எல்லாமே சீன அரசின் உதவியுடன் இயங்க தொடங்கிட்டாங்க. சீனாவில் உற்பத்தி மற்ற நாடுகளை விட அதிகரித்து இருக்கு. இப்ப எங்கிருந்து ஏற்றுமதி என்றாலும் அது சீனாவில் இருந்து தான் போகணும். தன்னுடைய நாட்டில் ஏற்பட்ட நோய் தொற்ற தன்னோட நாட்டுக்குள்ளே கட்டுப்படுத்தாம வேற நாடுகளுக்கு பரப்பி அதற்கு தேவையான மருத்துவ பொருட்களை அவர்களே உருவாக்கி அத மற்ற நாடுகளுடன் விலை பேசி வியாபாரம் செய்யுறத தந்திரம்னு சொல்லாம வேற என்ன சொல்ல முடியும். சீனா மற்றும் ஒருமுறை தன்னை நிரூபித்து விட்டாங்க