நாம் செய்யும் தானத்தின் அளவே நம் புண்ணியமும் அமையும். இன்றும் பலர் செய்து வரும் தானத்தின் பலனாகவே பூமியில் பல நன்மைகள் நடந்த வண்ணம் உள்ளன. தானம் அளிப்பவர்கள் உணவு பணம் பொருட்கள் என தானம் அளிப்பது உண்டு. இயலாதவர்களுக்கு அவர்களுக்கு வேண்டியதை அளிப்பதே தானம். அனால் தெரியாமல் கூட சிலதை தானமாக கொடுக்கக்கூடாது.அவை
- பழைய உணவு பொருட்களை தானமாக வழங்கினால் அளவுக்கதிகமான செலவை சந்திக்க வேண்டிய சூழல் உருவாகும்.
- கத்தி, ஊசி, கத்தரிக்கோல் போன்ற கூர்மையான பொருட்களை தானமாகக் கொடுத்தால் வீட்டில் துரதிர்ஷ்டத்தை கொண்டுவரும்.
- கிழிந்த துணிகளை தானமாகக் கொடுத்தாலும் வீட்டில் துரதிர்ஷ்டம் ஏற்படும் எனவே உடைந்த பொருட்கள் மற்றும் கிழிந்து போன துணிகள் போன்றவற்றை தானமாக வழங்குதல் கூடாது.
- துடைப்பத்தை தானமாக வழங்கினால் வீட்டில் இருக்கும் லட்சுமியை தானமாக கொடுப்பதற்கு சமம். இது வீட்டில் செல்வ செழிப்பை குறைக்க செய்யும்.