நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் டிவிட்டர் பக்கத்தில் வீடியோ வெளியிட்டு பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றியுள்ளார்.
அதில் கொரோனா வைரஸுடனான போரில் 9 நாட்களை நிறைவு செய்துள்ளோம். ஊரடங்கிற்கு நாட்டு மக்கள் முழு ஒத்துழைப்பு வழங்கி வருகின்றனர் என்று கூறியுள்ள அவர், அரசுக்கு முழு ஒத்துழைப்பு அளித்து வரும் மக்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
A video messsage to my fellow Indians. https://t.co/rcS97tTFrH
— Narendra Modi (@narendramodi) April 3, 2020
நாட்டு மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து கொரோனாவுக்கு யுத்தம் நடத்தி வருகிறோம். இந்தியாவின் மக்கள் ஊரடங்கு உலகளவில் முன்னுதாரணமாகி இருக்கிறது. மக்கள் அனைவரும் இணைந்து கொரோனாவை கட்டுப்படுத்த முயற்சி எடுத்துள்ளீர்கள் என நெகிழ்ச்சியாக தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸை கட்டுப்படுத்த நிரந்தர தீர்வை நோக்கி நாம் செல்ல வேண்டும்
கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த ஒளிமயமான காலத்தை கொண்டு வர வேண்டும். நாம் எடுக்கும் நடவடிக்கைகளை உலக நாடுகள் பின்பற்றி வருகின்றன. நாம் தனி ஆட்கள் இல்லை, 130 கோடி மக்களில் ஒன்றிணைந்துள்ளோம் என கூறியுள்ள மோடி, நெருக்கடியான நேரத்தில் நாம் அனைவரும் ஒன்றிணைந்தது பாராட்டத்தக்கது என்று குறிப்பிட்டுள்ளார்.