ஏப்ரல் 5ம் தேதி ஞாயிற்றுக்கிழமை இரவு 9 மணி முதல் 9 நிமிடங்கள் வீட்டின் மின்விளக்கை அணைத்துவிட்டு, டார்ச், அகல் விளக்குகளை ஏற்ற வேண்டும் என பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் டிவிட்டர் பக்கத்தில் வீடியோ வெளியிட்டு பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றியுள்ளார். அதில் நாட்டு மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து கொரோனாவுக்கு யுத்தம் நடத்தியதற்கு நன்றி தெரிவித்துள்ளார். ஊரடங்கை கடைபிடித்து வருவதில் இந்தியா முன்னுதாரணமாக இருந்து வருகிறது.
A video messsage to my fellow Indians. https://t.co/rcS97tTFrH
— Narendra Modi (@narendramodi) April 3, 2020
வரும் ஞாயிற்றுக்கிழமை கொரோனாவுக்கு எதிராக நாட்டு மக்கள் மஹா சக்தியை உருவாக்க வேண்டும் என்று கூறிய அவர், வரும் ஏப்.5ம் தேதி இரவு 9 மணிக்கு வீட்டு மின்மிளக்குகளை 9 நிமிடங்கள் அணைக்க வேண்டும். வீட்டின் நான்கு மூலைகளிலும் ஒளியை பரப்பும் வகையில் டார்ச் அல்லது செல்போன், அகல் விளக்கு, மெழுகுவர்த்தியை ஏற்ற வேண்டும் என தெரிவித்துள்ளார்.
செல்போன் டார்ச் மூலம் கொரோனோவுக்கு எதிராக வெளிச்சத்தை காட்டுங்கள். கொரோனா எனும் இருளை வெளிச்சத்தின் மூலம் அகற்றுவோம் என குறிப்பிட்டுள்ளார். சமூக விலகலை கடைபிடிக்க வேண்டும் – ஒன்று கூடி விளக்கு ஏற்ற கூடாது என்றும் கூறியுள்ளார். கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த ஒளிமயமான காலத்தை கொண்டு வர வேண்டும் என்ற நோக்கத்தில் இதனை செய்ய வேண்டும். வீட்டிலிருந்து அனைவரும் ஒன்றிணைந்தால் மட்டுமே கொரோனாவை கட்டுப்படுத்த முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாம் எடுக்கும் நடவடிக்கைகளை உலக நாடுகள் பின்பற்றி வருகின்றன. அனைவரும் ஒன்றிணைந்து கொரோனவை வீழ்த்துவோம் என பிரதமர் மோடி வலியுறுத்தியுள்ளார். ஏற்கனவே கைதட்ட சொல்லி இருந்த நிலையில், தற்போது மெழுகுவர்த்தி ஏந்தி நிற்க பிரதமர் வேண்டுகொள் விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.