Categories
தேசிய செய்திகள்

உற்சாகத்தை விட சிறந்த சக்தி எதுவும் இல்லை…. உற்சாகமாக கொரோனாவை எதிர்க்கலாம் – பிரதமர் மோடி!

நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் டிவிட்டர் பக்கத்தில் வீடியோ வெளியிட்டு பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றியுள்ளார். அதில் நாட்டு மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து கொரோனாவுக்கு யுத்தம் நடத்தியதற்கு நன்றி தெரிவித்துள்ளார்.

ஊரடங்கை கடைபிடித்து வருவதில் இந்தியா முன்னுதாரணமாக இருந்து வருகிறது என தெரிவித்த அவர், வரும் ஞாயிற்றுக்கிழமை கொரோனாவுக்கு எதிராக நாட்டு மக்கள் மஹா சக்தியை உருவாக்க வேண்டும் என்று கூறிய அவர், வரும் ஏப்.5ம் தேதி இரவு 9 மணிக்கு வீட்டு மின்மிளக்குகளை 9 நிமிடங்கள் அணைக்க வேண்டும்.

வீட்டின் நான்கு மூலைகளிலும் ஒளியை பரப்பும் வகையில் டார்ச் அல்லது செல்போன், அகல் விளக்கு, மெழுகுவர்த்தியை ஏற்ற வேண்டும் என தெரிவித்துள்ளார். செல்போன் டார்ச் மூலம் கொரோனோவுக்கு எதிராக வெளிச்சத்தை காட்டுங்கள். கொரோனா எனும் இருட்டை வெளிச்சத்தால் அகற்றுவோம் என குறிப்பிட்டுள்ளார்.

கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த ஒளிமயமான காலத்தை கொண்டு வர வேண்டும் என்ற நோக்கத்தில் இதனை செய்ய வேண்டும். ஒரே நேரத்தில் ஒளியேற்றுவதன் மூலம் நாம் அனைவரும் ஒற்றுமையாக இருக்கிறோம் என காட்டுவோம் என வேண்டுகோள் விடுத்துள்ளார். வெளியே வராமல் வீட்டு வாசல் அல்லது பால்கனியில் மக்கள் ஒளியேற்றலாம்.

சமூக விலகல் கட்டுப்பாட்டை மக்கள் விட்டுக்கொடுக்க வேண்டாம் என்றும் கூறியுள்ளார். மேலும் உற்சாகமாக இருந்து கொரோனாவை எதிர்த்து மக்கள் போரிட வேண்டும். உற்சாகத்தை விட மிகச்சிறந்த சக்தி எதுவும் இல்லை என்பதால் அனைவரும் உற்சாகமாக இருக்க வேண்டும் என பிரதமர் மோடி உரையாற்றியுள்ளார்.

Categories

Tech |