Categories
தேசிய செய்திகள்

கொரோனா விழிப்புணர்வு தொடர்பாக விளையாட்டு பிரபலங்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை!

கொரோனா குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவது தொடர்பாக விளையாட்டு பிரபலங்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தி வருகிறார். பல்வேறு விளையாட்டுகளை சேர்ந்த 40 முன்னணி வீரர்களுடன் பிரதமர் மோடி காணொலி மூலம் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.

உலகம் முழுவதும் 200க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு கொரோனா வைரஸ் பரவி இருக்கிறது. உலகமெங்கும் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 10 லட்சத்தை தாண்டியுள்ளது. உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 53 ஆயிரத்தை தாண்டியுள்ளது. இந்நிலையில் இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 2069 இலிருந்து 2301 ஆக அதிகரித்துள்ளது.

இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 50 இல் இருந்து 56 ஆக அதிகரித்திருக்கிறது. மேலும் கொரோனா பாதிப்பில் இருந்து 157 பேர் குணம் அடைந்திருக்கின்றனர். கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்காக நாடெங்கும் வரும் 14ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருக்கிறது.

மத்திய, மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். நேற்று கொரோனா பாதிப்பு நடவடிக்கை குறித்து அனைத்து மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்திய நிலையில், இன்று மக்களுக்கு உரையாற்றி ஒரு வீடியோவை வெளியிட்டார்.

அதில் நாட்டு மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து கொரோனாவுக்கு யுத்தம் நடத்தியதற்கு நன்றி தெரிவித்தார். இந்த நிலையில் கொரோனா குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவது தொடர்பாக விளையாட்டு பிரபலங்கள் 40 பேருடன் பிரதமர் மோடி ஆலோசனை செய்து வருகிறார். இந்த ஆலோசனையில் சச்சின், கங்குலி, பி.வி.சிந்து, ராணி ராம்பால் உள்ளிட்டோர் காணொலி மூலம் ஆலோசனையில் பங்கேற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |