Categories
தேசிய செய்திகள்

புதிதாக பிறந்த இரட்டை குழந்தை… ‘கொரோனா’ மற்றும் ‘கோவிட்’ என பெயர் சூட்டிய பெற்றோர்!

சத்தீஸ்கர் மாநிலத்தில் ஒரு தம்பதியினர் தங்களது இரட்டை குழந்ததைகளுக்கு ‘கொரோனா’ மற்றும் ‘கோவிட்’ என்று பெயர் வைத்துள்ளனர்.

கொரோனா வைரஸ் (கோவிட்) உலகையே ஆட்டிப்படைத்து வருகிறது. இந்த வைரஸை கட்டுப்படுத்த அனைத்து நாடுகளும்  ஊரடங்கை பிறப்பித்துள்ளது. நாளுக்குநாள் இதனுடைய தாக்கம் அதிகரித்து கொண்டே செல்கிறது. இந்தியாவிலும் தற்போது கொரோனா வேகமாக பரவி வருகிறது. கொரோனா என்ற அந்த ஒரு வார்த்தை  தெரியாதவர்களே கிடையாது என்று தான் சொல்ல வேண்டும். ஆம், சிறுகுழந்தை முதல் பெரியவர்கள் வரை அனைவரது மனதிலும் கொரோனா என்ற பெயர் பதிந்திருக்கும். அந்த அளவிற்கு அதன் தாக்கம் தற்போது இருக்கிறது.

இந்த நிலையில் சமீபத்தில் பிறக்கும் குழந்தைகளுக்கு சிலர் கொரோனா என்று பெயர் சூட்டி மகிழ்ந்து வருகின்றனர்.  அந்த வகையில் சத்தீஸ்கர் மாநிலத்தில் ஒரு தம்பதியினருக்கு இரட்டை குழந்ததைகள் பிறந்தது. அவர்கள் குழந்தைகளுக்கு‘கொரோனா’ மற்றும் ‘கோவிட்’என்று பெயர் வைத்துள்ளனர்.

இருப்பினும், தம்பதியினர் பின்னர் தங்கள் முடிவை மாற்றி தங்களது குழந்தைகளுக்கு மறு பெயரிடலாம் என்று கூறினர். இந்த 2 சொற்களும் மற்றவர்களின் மனதில் ஒரு வித அச்சத்தையும் பேரழிவையும் உருவாக்ககூடும். ஆனால் ராய்ப்பூர் தம்பதியினர் தங்கள் இரட்டை குழந்தைகளான ஒரு ஆண் – ஒரு பெண் குழந்தைகள் கஷ்டங்களை வென்றெடுப்பதை அடையாளப்படுத்தும் வகையில் ‘கொரோனா- கோவிட்’ என்று பெயரிட்டுள்ளனர்.

இதுகுறித்து குழந்தைகளின் தாயார் ப்ரீத்தி வர்மா கூறியதாவது, மார்ச் 27 ஆம் தேதியன்று அதிகாலையில் நான் இரட்டையர்கள், ஒரு பையன் மற்றும் ஒரு பெண்ணை பெற்றேடுத்தேன். நாங்கள் அவர்களுக்கு இப்போது கோவிட் (பையன்) மற்றும் கொரோனா (பெண்) என்று பெயரிட்டுள்ளோம் என்றார்.

மேலும் “பல சிரமங்களை எதிர்கொண்ட பிறகு எனக்கு பிரசவம் நடந்தது. ஆகவே  நானும் எனது கணவரும் அந்த நாளை மறக்கமுடியாததாக மாற்ற விரும்பினோம். அதனால் தான் இந்த பெயர்களை வைத்துள்ளோம். தொற்றுநோய் மக்களை சுகாதாரம், மற்றும் பிற நல்ல பழக்கங்களை ஊக்குவிப்பதில் கவனம் செலுத்துகிறது” என்றும் அவர் கூறினார்.

Categories

Tech |