உத்தரபிரதேச மாநிலத்தில் இன்று புதிதாக 172 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக அம்மாநில அரசாங்க வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது. அதில் சுமார் 42 பேர் டெல்லி தப்லீகி ஜமாத் அமைப்பு நடத்திய மதக்கூட்டத்தில் பங்கேற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மத்திய சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கையின் படி, இந்தியாவில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 2,301 ஆக அதிகரித்துள்ளது.
மேலும் கொரோனா பாதிப்பில் 335 பேருடன் மஹாராஷ்டிரா முதலிடத்தையும், 309 பேருடன் தமிழகம் 2வது இடத்தையும் பெற்றுள்ளது. சுமார் 157 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து 56 பேர் உயிரிழந்துள்ளனர். ஆந்திர மாநிலத்தில் கொரோனாவால் மேலும் 12 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதையடுத்து மொத்தமாக நோய் தொற்று உள்ளவர்களின் எண்ணிக்கை 161 ஆக அதிகரித்துள்ளதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது. இந்த நிலையில், உத்தரபிரதேசத்தில் இன்று மட்டும் புதிதாக 172 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக அம்மாநில அரசு தரப்பில் தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.