ஊரடங்கு உத்தரவை மக்கள் பின்பற்றவில்லை என்றால் 144 தண்டனை கடுமையாக்கப்படும் என்று தமிழக முதல்வர் எச்சரித்துள்ளார்.
வெளிமாநில முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ள வெளிமாநில தொழிலாளர்களை சந்தித்த தமிழக முதல்வர் சென்னை வேளச்சேரியில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், பிற மாநிலங்களிலிருந்து வந்து பணியாற்றும் 1.34 லட்சம் பணியாளர்கள் தமிழகத்தில் உள்ளனர். வெளிமாநில தொழிலாளர்களுக்கு தேவையான உணவு, தங்குமிடம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 144 தடை உத்தரவு மக்களை துன்புறுத்துவதற்காக அல்ல, இது அனைவரும் பாதுகாப்பாக இருப்பதற்கானது, இதை மனதில் வைத்து மக்கள் ஒத்துழைப்பு தர வேண்டும்.
ஊரடங்கை மதிக்காவிட்டால் சட்டம் தன் கடமையை செய்யும். மக்கள் வெளியே சுற்றுவதை அதிகரித்தால் 144 உத்தரவு கடுமையாக நேரிடும். கொரோனா பரவாமல் தடுக்க மக்கள் அரசுக்கு முழு ஒத்துழைப்பு தர வேண்டும். அத்தியாவசிய தேவை இன்றி வெளியே வருபவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் . கொரோனாவின் தாக்கத்தைப் பற்றி தெரியாமல் மக்கள் வெளியே சுற்றுகின்றனர் என்று தமிழக முதல்வர் தெரிவித்தார்.