ஆந்திரப்பிரதேசத்தில் கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக முதல்முறையாக ஒருவர் பலியாகியுள்ளார்.
இந்தியாவில் கொரோனா வைரஸ் காட்டு தீயைப்போல வேகமாக பரவி வருகின்றது. இதனை இப்படியே விட்டுவிட்டால் நாடு பெரும் இழப்பை சந்தித்துவிடும் என்பதால், மிகப்பெரிய பாதிப்பை தவிர்க்கும் வகையில் மத்திய அரசு நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தியுள்ளது.
இருப்பினும் நாளுக்குநாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து கொண்டே செல்கிறது. இன்று மதிய நிலவரப்படி கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இந்தியாவில் 2500-ஐ தாண்டியுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.இந்நிலையில், ஆந்திரப்பிரதேசத்தில் கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக முதல்முறையாக ஒருவர் பலியாகியுள்ளார்.
இதுதொடர்பாக அம்மாநில சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆந்திராவில் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக முதல் முறையாக ஒருவர் பலியாகியுள்ளார். கொரோனா வார்டில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த 55 வயதான நபர் கடந்த 30 ஆம் தேதி பலியானார். ஆனால், அவரது இறப்புக்கான காரணம் உறுதி செய்யப்படாமல் இருந்த நிலையில் தற்போது அவர் கொரோனா வைரசால் உயிரிழந்தது ஆய்வில் உறுதி செய்யப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளது.