உலகளவில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 54,045ஆக உயர்ந்துள்ளது. அதிகபட்சமாக இத்தாலியில் 13,915, ஸ்பெயினில் 10,935, அமெரிக்காவில் 6,095 பெரும் உயிரிழந்துள்ளனர். கொரோனா என்ற அதிதீவிர புயலில் சிக்கி சுமார் 204 நாடுகள் சின்னாபின்னமாகி வருகின்றன. முன்னதாக, உலகளவில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 10 லட்சமாக அதிகரித்திருந்தது.
மேலும், சர்வதேச அளவில் கொரோனாவால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 51 ஆயிரத்தை தாண்டியிருந்தது. கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 2 லட்சத்து 10 ஆயிரம் பேர் குணமடைந்துள்ளனர். இந்த நிலையில் தற்போதைய நிலவரப்படி உலக நாடுகளில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 54 ஆயிரத்தை தூண்டியுள்ளது. உலக அளவில் 10 லட்சத்து 34 ஆயிரத்து 116 ஆக உள்ளது. இறந்தவர்கள் எண்ணிக்கை 54 ஆயிரத்து 465. மேலும் இதுவரை குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 2 லட்சத்து 23 ஆக உள்ளது.