Categories
மருத்துவம் லைப் ஸ்டைல்

பற்களில் மஞ்சள் கரையா….? சிம்பிள் டிப்ஸ்….. வீட்டிலையே செய்யலாம்….!!

பற்களில் உள்ள மஞ்சள் கரையை எப்படி நீக்குவது என்பது குறித்து இந்த செய்தி தொகுப்பில் காண்போம்.

பொதுவாக இளைஞர்கள் ஆணாக இருந்தாலும் சரி, பெண்ணாக இருந்தாலும் சரி தங்களது புன்னகையில் தான் அழகை வெளிக்காட்டுவார்கள். அப்படி புன்னகைக்கும் போது தங்களது பற்கள் வெண்ணிறமாக காட்சியளிக்க வேண்டும் என்று ஆசைப்படுவார்கள். ஆனால் மஞ்சளாக இருந்தால் சிரிக்கவே யோசிப்பார்கள்.

மஞ்சள் கரையை நீக்க என்ன செய்வது என்பது குறித்து பார்ப்போம். பேக்கிங் சோடா 2 ஸ்பூன், தேங்காய் எண்ணெய் ஒரு ஸ்பூன், ஆப்பிள் சீடர் வினிகர் ஒரு ஸ்பூன், எலுமிச்சை சாறு ஒரு ஸ்பூன், டூத்பேஸ்ட் ஒரு ஸ்பூன் ஆகியவற்றை ஒரு பவுலில் போட்டு பேஸ்ட் போல் கலந்து கொள்ளவும். அலுமினியத்தாள் ஒன்றை விரித்து அவற்றில் பரப்பியவாறு வைக்கவும். அதை பற்களைச் சுற்றி ஒட்டிவிட வேண்டும். இரண்டு நிமிடங்கள் கழித்து பிரஷ்ஷால் தேய்த்து விட்டு வெந்நீரில் கொப்பளித்தால் பற்களில் மஞ்சள் கறை குறைந்திருக்கும்.

Categories

Tech |