விடுமுறை நாட்களில் குழந்தைகள் விளையாடுவதற்கும் கோடைகாலத்தில் நிழலைக் கொடுத்து வழிப்போக்கர்களுக்கு உதவும் ஆலமரத்தில் மருத்துவப் பயன்கள் பற்றிய தொகுப்பு
- ஆலமரத்தின் இலை மற்றும் வேரை கொண்டு கசாயம் செய்து தொடர்ந்து 48 நாட்கள் குடித்து வருவதனால் வலிப்பு நோயை முற்றிலுமாக குணப்படுத்த முடியும்.
- தண்ணீரில் ஆலம்பட்டையை போட்டு நன்றாக கொதிக்க வைத்து வாய் கொப்பளித்து வந்தால் வாய்ப்புண், வாய் நாற்றம் அகன்றுவிடும்.
- ஆலம் விழுதை பொடியாக்கி பல் துலக்க பயன்படுத்தினால் பல் வலி பறந்து போகும், ஈறுகள் பலம் பெறும்.
- ஆலமர வேர். மொட்டு. விழுது போன்றவைகளை கசாயம் செய்து குடித்து வருவதனால் தீராத காய்ச்சலும் தீர்ந்துவிடும்.
- ஆலமரத்தில் இருக்கும் பழங்களை சாப்பிட்டு வருவதனால் உடல்வலி காணாமல் போகும்.
- ஆலமர வேரை நன்றாக அரைத்து பசை பதத்தில் காயங்களில் வைத்து வந்தால் காயம் ஆறிவிடும்.
- ஆலமரத்தின் நிழலில் அமர்ந்து நன்றாக சுவாசம் செய்தால் சுவாச நோய் ஏற்படாமல் தடுக்கும், ஞாபக சக்தி அதிகரிக்கும், மன அழுத்தம் குறையும்.