Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

மீனம் ராசிக்கு… சஞ்சலங்கள் தீரும்.. நண்பர்களிடம் நல்ல பெயர் கிடைக்கும்..!!

மீனம் ராசி அன்பர்களே..! இன்று சஞ்சலங்கள் தீரும் நாளாகவே இருக்கும் உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் பாராட்டைப் பெறுவீர்கள். நண்பர்களின் மத்தியில் நல்ல பெயர் எடுக்கக்கூடும்.. பயணங்கள் செய்யும் பொழுது மட்டும் கொஞ்சம் கவனமாகவே இருங்கள். உடல் ஆரோக்கியத்திலும் இன்று கவனமாக இருக்கவேண்டும். எதிர்பாராத வகையில் பணவரவு வருவதற்கான வாய்ப்புகள் இருக்கும்.

பொருளாதார நிலை சிறப்பாக இருப்பதால் கடன்கள் யாவும் குறையும். வீடு,மனை,வண்டி,வாகனம் பராமரிப்பு செலவு கொஞ்சம் அதிகரிக்கும், பார்த்துக்கொள்ளுங்கள் . பூர்வீக சொத்துக்களாலும் லாபம் உங்களுக்கு வருவதற்கு வாய்ப்புகள் அமையும். உங்களுடைய சிந்தனை திறன் அதிகரிக்கும். ஆன்மிகப் பணியில் நாட்டம் செல்லும். சமூக அக்கறையுடன் நின்று சில காரியங்களை மேற்கொள்வீர்கள். பிள்ளைகளிடம் கொஞ்சம் அன்பாகவே நடந்து கொள்ளுங்கள். பெரியவர்களிடமும் கொஞ்சம் மதிப்பாகவும்  மரியாதையாகவும் நடந்து கொள்வது ரொம்ப நல்லது.

இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது நீல நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப சிறப்பு .நீல நிறம்   எல்லாம் அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று இல்லத்தில் விஷ்ணுபகவான் வழிபாட்டை மேற்கொள்ளுங்கள் காரியங்கள் சிறப்பாக நடக்கும். .அதுபோலவே இன்று சனிக்கிழமை என்பதால் கலந்த சாதத்தை காக்கைக்கு அன்னம் ஆக கொடுப்பதை வழக்கமாக்கிக் கொள்ளுங்கள்.. உங்கள் வாழ்க்கையில் உள்ள தோஷங்கள் அனைத்தும் நீங்கப் பெற்று சந்தோஷமாக இருப்பீர்கள்.

அதிர்ஷ்ட திசை : வடமேற்கு

அதிர்ஷ்ட எண்: 3 மற்றும் 7

அதிர்ஷ்ட நிறம்: நீலம் மற்றும் இளம் மஞ்சள் நிறம்

Categories

Tech |