சென்னையில் 8 இடங்களை கட்டுப்படுத்தப்பட்ட பகுதியாக தமிழக அராசு அறிவித்துள்ளது.
உலகம் முழுவதும் பெரும் அச்சத்தை ஏற்படுத்திய கொரோனா வைரஸின் தாக்கம் இந்தியாவிலும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனை பரவாமல் தடுப்பதற்காக மத்திய அரசு 144 தடை உத்தரவை ஏப்ரல் 14ம் தேதி வரை பிறப்பித்துள்ளது. அதனை ஏற்று பொதுமக்களும் தங்களது வீடுகளில் முடங்கி இருக்கின்றனர். இந்த சூழ்நிலையில் தமிழகம் மட்டுமல்லாமல்,
இந்தியா முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் இருக்கும் இடத்தை கட்டுப்படுத்தப்பட்ட பகுதியாக அரசு மாற்றி வருகிறது. அந்த வகையில் சென்னையில் 8 இடங்களை கட்டுப்படுத்தபட்ட பகுதிகளாக தமிழக அரசு அறிவித்துள்ளது. அவையாவன, புளியந்தோப்பு, தண்டையார்பேட்டை, எண்ணூர், நேதாஜி நகர், முத்தியால்பேட்டை, புதுப்பேட்டை, சைதாப்பேட்டை, புரசைவாக்கம், வேளச்சேரி ஆகிய இடங்கள் பலத்த பாதுகாப்புடன் பொதுமக்கள் கட்டுப்படுத்தப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டு வருகின்றனர்.