Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

கும்பம் ராசிக்கு…வருங்கால நலனில் முக்கிய முடிவெடுப்பீர்கள்..தொல்லை கொடுத்தவர்கள் விலகுவார்கள்..!!

கும்பம் ராசி அன்பர்களே..! இன்று தனவரவு தாராளமாக இருக்கும். வருங்கால நலன் கருதி நீங்கள் முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். சேமிக்கும் எண்ணம் மேலோங்கும். திருமண பேச்சுகள் முடிவாகும். தொழில் வளர்ச்சிக்கு தொல்லை கொடுத்தவர்கள் விலகிச்செல்வார்கள். இன்று உத்தியோகஸ்தர்களுக்கு உயர்வுகளும் இடமாற்றங்களும் தாமதமாகத்தான் கிடைக்கும். இன்று முழு ஈடுபாட்டுடன் காரியங்களை மேற்கொள்ளுங்கள். காரியங்கள் வெற்றியை கொடுக்கும்.

திறம்பட செயல்பட்டு காரியத்தை நீங்கள் கண்ணும் கருத்துமாக செய்வீர்கள். பெரியோர்களின் ஆதரவை நீங்கள் முழுமையாகவே பெறுவீர்கள். கொடுக்கல் வாங்கல் சிறப்பாகவே இருக்கும். கணவன் மனைவிக்கு இடையே அன்பு இருக்கும். குடும்பத்தில் ஒற்றுமை பலப்படும். சகோதரர் வகையில் கூட உங்களுக்கு உதவிகள் கிடைக்கும். உற்றார் உறவினர்களின் வருகை இருக்கும். செலவு கொஞ்சம் இருக்கும் பார்த்துக் கொள்ளுங்கள். வரவு இருந்தாலும் செலவை மட்டும் கட்டு படுத்திக் கொள்வதற்கும் முயற்சிகளை மேற்கொள்ளுங்கள்.

அக்கம்பக்கத்தினரிடம் அன்பாகவே நடந்துகொள்ளுங்கள். காதல் கைகூடும் நாளாகவே இன்றைய நாள் உங்களுக்கு இருக்கும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது ஆரஞ்சு நிறத்தில் ஆடை அணிந்து கொள்வது ரொம்ப நல்லது. ஆரஞ்சு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தையும் கொடுக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று இல்லத்தில் விஷ்ணுபகவான் வழிபாட்டை மேற்கொள்ளுங்கள், ரொம்ப சிறப்பாகவே நடக்கும். அது போலவே இன்று சனிக்கிழமை என்பதால் எள் கலந்த சாதத்தை காக்கைக்கு அன்னமாக கொடுங்கள் உங்கள் வாழ்க்கையில் சந்தோஷம் குடிகொள்ளும்.

அதிர்ஷ்ட திசை: வட கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 1 மற்றும் 9

அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு மற்றும் இளம் மஞ்சள் நிறம்

Categories

Tech |