தனுசு ராசி அன்பர்களே..! இன்று பணவரவு திருப்தி தரும் நாளாகவே இருக்கும். உத்யோகத்தில் இருப்பவர்கள் உங்கள் பணிக்கு ஒத்துழைப்பு கொடுப்பார்கள். பூமி விற்பனை செய்யலாம் என்று சிந்தனை மேலோங்கும். கடல் தாண்டி வரும் செய்தி மேலோங்கும். திருமண சுபகாரிய நிகழ்ச்சிகளில் பல இடையூறுகளுக்கு பின் வெற்றி கிடைக்கும். தொழில் வியாபாரத்தில் மந்த நிலை நிலவினாலும் பொருட் தேக்கம் ஏற்படாது. கூட்டுத்தொழிலில் சற்று கவனமாகவே இருங்கள். அவரிடம் எந்தவித பொறுப்புகளை ஒப்படைக்காமல் நேரடியாக நீங்களே செய்வது ரொம்ப நல்லது.
கூடுமானவரை ரகசியங்களை கொஞ்சம் பாதுகாத்திடுங்கள். உடல்நிலையில் பொருத்தவரை எந்தவித பிரச்சனையும் இல்லாமல் சுமுகமாக இருக்கும். குடும்பத்தில் ஒற்றுமை இருக்கும். கணவன் மனைவிக்கு இடையே அன்பு இருக்கும், இருந்தாலும் அனைவரையும் அனுசரித்துச் செல்லுங்கள் அது போதும். யாரிடமும் வாக்குவாதங்கள் எப்பொழுதுமே வேண்டாம். வீண் அலைச்சலை முற்றிலும் தவிர்த்து விடுங்கள். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது மஞ்சள் நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது.
மஞ்சள் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அதுமட்டுமில்லை இன்று இல்லத்தில் விஷ்ணு பகவான் வழிபாட்டை மேற்கொள்ளுங்கள், காரியங்கள் அனைத்தும் ரொம்ப சிறப்பாகவே நடக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று சனிக்கிழமை என்பதால் எள் கலந்த சாதத்தை காக்கைக்கு அன்னமாக கொடுங்கள், உங்கள் வாழ்க்கையில் சந்தோஷத்தை மட்டும் அனுபவிக்கலாம். தோஷங்கள் அனைத்தும் நீங்கப் பெற்று சந்தோஷமாக இருக்கலாம்.
அதிர்ஷ்டமான: திசை
அதிர்ஷ்ட எண்: 2 மற்றும் 3
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள் மற்றும் இளம் பச்சை நிறம்