Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

விருச்சிகம் ராசிக்கு… சான்றோர்களின் சந்திப்பு கிடைக்கும்..பிரச்சனைகள் நல்ல முடிவிற்கு வரும்..!!

விருச்சிகம் ராசி அன்பர்களே..! இன்று சான்றோர்களின் சந்திப்பு கிடைத்து மகிழும் நாள் ஆகவே இருக்கும். குடும்பத்திற்கு தேவையான பொருட்களை வாங்க கூடும். உங்கள் யோசனைகளை கேட்டு நடந்துகொண்டு வாழ்த்துவார்கள். நேற்றைய பிரச்சினை இன்று நல்ல முடிவிற்கு வரும். உடல்நிலையில் பிரச்சினைகள் ஏற்பட்டாலும் சிறிதளவு மருத்துவச் செலவுகளுக்குப் பின் குணமாகும். பொருளாதார நிலையில் நெருக்கடிகள் நிலவினாலும் செலவுகள் கட்டுக்குள் இருப்பதால் எதையும் சமாளித்து விடுவீர்கள்.

கடன் பிரச்சனைகள் இருக்காது மகிழ்ச்சியாகவே இருக்கும். தெய்வ வழிபாட்டுடன் இன்றைய காரியங்களை செய்வீர்கள். இறைவழிபாடு தான் நின்று உங்களுக்கு சிறப்பான விஷயத்தை கொடுக்க கூடியதாகவே அமையும். உங்களுடைய மனம் மட்டும் அமைதியாகவே இருக்கும். அனைத்து கலைகளும் சிறப்பாக செய்து விடுவீர்கள். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது வெள்ளை நிறத்தில் ஆடை அணிந்து கொள்வது ரொம்ப நல்லது. வெள்ளை அதிர்ஷ்டத்தை கொடுக்கும்.

அதுமட்டுமில்லாமல் இன்று இல்லத்தில் விஷ்ணு வழிபாட்டை மேற்கொள்ளுங்கள் காரியங்கள் அனைத்தும் ரொம்ப சிறப்பாகவே நடக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று சனிக்கிழமை என்பதால் எள் கலந்த சாதத்தை காக்கைக்கு அன்னமாக கொடுங்கள். உங்கள் வாழ்க்கையில் உள்ள தோஷங்கள் நீங்கப் பெற்று செல்வச் செழிப்புடன் வாழலாம்.

அதிர்ஷ்ட எண்: 1 மற்றும் 7

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை மற்றும் நீல நிறம்

அதிஷ்ட திசை: தெற்கு

Categories

Tech |