Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

சிம்மம் ராசிக்கு… குடும்பத்தினர் முயற்சிக்கு பக்கபலமாக இருப்பார்கள்…ஆரோக்கியத்தில் அக்கறை வேண்டும்..!!

 சிம்மம் ராசி அன்பர்களே..! இன்று உங்களுடைய அலுவலகப் பணிகள் துரிதமாக நடைபெறும். குடும்பத்தினர்கள் உங்களுடைய தொழில் முயற்சிக்கு பக்கபலமாக இருப்பார்கள். சகோதரர் வகையில் உங்களுக்கு உதவிகள் கிடைக்கும். ஆரோக்கியத்தில் அக்கறை வேண்டும். சரியான உணவை தேர்ந்தெடுத்து உண்ணுங்கள். வயிற்று உப்புசம் போன்ற பிரச்சினைகள் வரக்கூடும். அஜீரண கோளாறு போன்றவை வரக்கூடும் பார்த்துக்கொள்ளுங்கள். இன்று தேவையற்ற பழிச்சொல்லை  நீங்கள் எடுக்கக்கூடும்.

ஆகையால் எந்த ஒரு வேலையையும் நீங்களே முன்னின்று செய்வதுதான் ரொம்ப நல்லது. யாரிடமும் எந்தவித பொறுப்புகளையும் இன்று ஒப்படைக்க வேண்டாம். மேல் அதிகாரிகளின் கெடுபிடிகளுக்கு ஆளாக நேரிடும். உடல் நிலையில் கவனம் செலுத்துவது இன்று ரொம்ப அவசியம் பார்த்துக்கொள்ளுங்கள். குடும்பத்திலுள்ளவர்களாலும் மருத்துவ செலவுகள் கொஞ்சம் ஏற்படும் கவனம் கொள்ளுங்கள். பிள்ளைகளிடம் கொஞ்சம் அன்பாகவே நடந்து கொள்ளுங்கள். அக்கம்பக்கத்தினர் இடமும் அன்பாகவே நடந்து கொள்ளுங்கள். இன்று திருமண முயற்சிகள் ஏதும் வேண்டாம். புதிய முயற்சிகளும் ஏதும் வேண்டாம்.

கொடுக்கல் வாங்கலும் ஏதும் வேண்டாம். கூடுமானவரை பொறுமையாகவும் நிதானமாகவும் இறை வழிபாட்டுடன் இன்றைய நாளை நீங்கள் கடத்துவது மிகவும் நல்லது. இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது சிவப்பு நிறத்தில் ஆடை அணிந்து கொண்டால் சிறப்பாகவே இருக்கும். அதுமட்டுமில்லை இன்று சனிக்கிழமை என்பதால் எள் கலந்த சாதத்தை காக்கைக்கு அன்னம் ஆக கொடுங்கள். உங்கள் வாழ்க்கையில் உள்ள அனைத்து வித பிரச்சனைகளும் சரியாகி சந்தோஷத்தை ஏற்படுத்தும்.

அதிர்ஷ்ட திசை : வடமேற்கு

அதிர்ஷ்ட எண்: 2 மற்றும் 7

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு மற்றும் நீல நிறம்

Categories

Tech |