Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

மேஷம் ராசிக்கு..சிந்தனைகள் வெற்றியாகும்… உறவினர்கள் மதிப்பார்கள்..!!

மேஷம் ராசி அன்பர்களே..! இன்று விஷ்ணு வழிபட்டால் சிந்தனைகளில் வெற்றிபெறும் நாளாகத்தான் இருக்கும். கைமாற்றாக கடனாக கொடுத்த தொகை திரும்ப கிடைக்கக்கூடும். நிர்வாகத்திறமை பளிச்சிடும். உறவினர்கள் மதிக்கும்படி நடந்து கொள்வீர்கள். கணவன் மனைவிக்கு இடையே ஒற்றுமை இன்று பலப்படும். உற்றார் உறவினர்களால் இன்று சாதகமான பலன்களும் மங்களகரமான சுபகாரியங்களும் நடைபெற கூடிய வாய்ப்புகளும் இருக்கும்.

சிலருக்கு புதிய தொழில் தொடங்க கூடிய யோகமும் அதற்கு அரசு வழியில் உதவியும் கிடைக்க கூடும். அரசாங்கத்தால் ஆதாயமும் இன்று உங்களுக்கு கிடைக்கக்கூடும். இன்று  மனம் நொந்து சிலர் உங்களுக்கு உதவிகள் செய்வார்கள் நீங்களும் மற்றவர்களுக்கு உதவிகள் செய்யக் கூடிய அளவில் உங்களை நீங்கள் தயார் படுத்தி கொள்வீர்கள்.

குடும்பத்தில் மகிழ்ச்சியும் ஒற்றுமையும் அதிகமாகவே இருக்கும். பிள்ளைகளை மட்டும் தயவு செய்து அனுசரித்துச் செல்லுங்கள். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது வெள்ளை நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது, வெள்ளை அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று இல்லத்தில் விஷ்ணு பகவான் வழிபாட்டை மேற்கொள்ளுங்கள் காரியங்கள் சிறப்பாகவே இருக்கும்.

அதிர்ஷ்டமான திசை: வடகிழக்கு

அதிர்ஷ்ட எண்: 1 மற்றும் 5

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள் மற்றும் வெள்ளை நிறம்

Categories

Tech |