Categories
உலக செய்திகள்

ஒரே நாளில் 1,120 பேர் மரணம்…! பிரான்ஸ்சில் கோரத்தாண்டவம் ஆடிய கொரோனா …!!

கொரோனா வைரஸ் தாக்கத்தால் பிரான்ஸ் நாட்டில் 6507 பேர் உயிரிழந்துள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த டிசம்பர் மாதம் சீனாவின் ஹூபேய் மாகாணத்தின் வுகான் நகரில் பரவ தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது உலகின் 198 நாடுகளில் உள்ள மக்களை பாதித்து கதிகலங்க வைத்துள்ளது. இந்த வைரஸ்ஸின் கொடூர தாக்குதலின் வீரியம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்வதாலும்,  இதற்கு மருந்து கண்டுபிடிக்க முடியாமல் இருப்பதாலும் உலக நாடுகள் இதனை கட்டுப்படுத்த திணறி வருகின்றனர்.

France closes 120 schools because of the coronavirus, sending home ...

தினந்தோறும் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கையும், பலி எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே செல்வதால் உலகளவில் மக்கள் அச்ச உணர்வுடன் இருந்து வருகின்றார்கள். உலகளவில் கொரோனா வைரஸ் தாக்கத்தால் 1,087,374 பேர் பாதிக்கப்பட்ட நிலையில் 58,392 பேர் உயிரிழந்துள்ளனர். 227,989 பேர் குணமடைந்த நிலையில் 800,993 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 39,402 பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

New coronavirus advisory refrains Indians from travelling to ...

ஒரே நாளில் அதிக உயிரிழப்பாக பிரான்ஸ்ஸில் நேற்று மட்டும் 1,120 பேர் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளனர். இதனால் அங்கு உயிரிழப்பு எண்ணிக்கை 6,507ஆக அதிகரித்தது. பிரான்ஸ்ஸில் 64,338 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதில் 14,008 பேர் குணமடைந்துள்ளனர். இதில் 43,823 பேர் சிகிச்சை பெற்று வரும் நிலையில் 6,662 பேர் இக்கட்டான நிலையில் இருக்கின்றனர்.

Categories

Tech |