Categories
உலக செய்திகள்

ஒரே நாளில் 77,921 பேருக்கு கொரோனா ….. அசுர வேகத்தில் பரவுவதால் அச்சம் …!!

உலகளவில் நேற்று ஒரே நாளில் 77,921 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது இதன் பரவல் வேகத்தை காட்டுகின்றது. 

கடந்த டிசம்பர் மாதம் சீனாவின் ஹூபேய் மாகாணத்தின் வுகான் நகரில் பரவ தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது உலகின் 198 நாடுகளில் உள்ள மக்களை பாதித்து கதிகலங்க வைத்துள்ளது. இந்த வைரஸ்ஸின் கொடூர தாக்குதலின் வீரியம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்வதாலும்,  இதற்கு மருந்து கண்டுபிடிக்க முடியாமல் இருப்பதாலும் உலக நாடுகள் இதனை கட்டுப்படுத்த திணறி வருகின்றனர்.

World Health Organization declares coronavirus outbreak as ...

 

தினந்தோறும் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கையும், பலி எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே செல்வதால் உலகளவில் மக்கள் அச்ச உணர்வுடன் இருந்து வருகின்றார்கள். உலகளவில் கொரோனா வைரஸ் தாக்கத்தால் 1,092,986 பேர் பாதிக்கப்பட்ட நிலையில் 58,727 பேர் உயிரிழந்துள்ளனர். 228,038 பேர் குணமடைந்த நிலையில் 806,221 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 39,402 பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

coronavirus: History repeats itself: World failed to learn lessons ...

இதில் நேற்று ஒரே நாளில் 77,921 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியது இதன் பரவல் வேகத்தை உணர்த்துகின்றது. நேற்று ஒரே நாளில் அமெரிக்காவில் 28,048 பேருக்கும், ஸ்பெயினில் 7,134 பேருக்கும், ஜெர்மனியில் 6,365 பேருக்கும், பிரான்ஸ்ஸில் 5,233 பேருக்கும், இத்தாலியில் 4,585 பேருக்கும், பிரிட்டனில் 4,450 பேருக்கும் நேற்று ஒரே நாளில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

 

Categories

Tech |