வேப்பம் பூவை உணவில் அவ்வப்போது சேர்த்துக்கொண்டால் ஏகப்பட்ட நன்மைகள் நமக்கு கிடைக்கும்..!
தமிழர்களின் பண்பாட்டோடும், பழக்க வழக்கங்களோடும் பிணைந்துள்ள வேம்பின் அனைத்து பாகங்களும் பயன் உடையது என்று சித்தர்கள் தெரிவித்துள்ளனர். இதனாலேயே கிராமத்தின் மருந்தகம் என்று வேப்பமரம் சிறப்பிக்கப்படுகிறது. வேப்பமரம் சக்தியின் வடிவமாக இன்றும் கிராமங்களில் வழிபடப்படுகிறது. இயற்கையின் வரப்பிரசாதமான இம்மரத்தின் வேர், பட்டை உட்பாகம், இலை, பூ, காய், பழம், விதை, எண்ணெய் என அனைத்தும் பகுதிகளும் பயன் தர கூடியது.
வேப்பம் பூ ஒரு கைப்பிடி அளவு எடுத்து அவற்றை நீரில் ஊற வைத்த பின்பு, அந்த நீரை தினந்தோறும் காலையில் வெறும் வயிற்றில் குடித்து வந்தால் கெட்ட கொழுப்பு நீங்கி உடல் பருமன் வெகுவாக குறைவதை காணலாம். வாயுத்தொல்லை ஏப்பம் அதிகமாக வருதல், பசியின்மை போன்றவைகளுக்கு வேப்ப மரத்தின் பூக்களை மென்று தின்றால் ஒருவாரத்தில் நிவாரணம் கிடைக்கும்.
கொதிக்க வைத்த நீரில் வேப்பம் பூவை போட்டு ஆவி பிடித்தால் தலைவலி, காது வலி நீங்கும். வேப்ப மரக் காற்று பல வியாதிகளை குணப்படுத்தும். அதன் குச்சி, இலை, துளிர் பூ என அனைத்தும் மிக பயன் உள்ளது. வேப்பம்பூ கொஞ்சம் எடுத்து சாப்பிட்டு வந்தால் தொண்டையில் ஏற்பட்ட புண் விரைவில் குணமாகும்.
வேப்பம் பூவை நன்றாக உலர வைத்து அவற்றை நன்கு அரைத்து சம அளவு இந்து உப்பு கலந்து காற்றுப் புகாத பாத்திரத்தில் வைத்து, தினந்தோறும் எடுத்து கண்களில் தீட்டி வந்தால், கண்கள் பளிச்சென்று தெரியும். வேப்பம்பூ வயிற்றுக்கு தீங்கின்றி குடலில் உள்ள கிருமிகளை ஒழிக்கும். சிறுவர்களின் வயிற்றையும் சுத்தப்படுத்த வாரத்திற்கு இரண்டு நாட்கள் வேப்பம் பூ கஷாயம் வைத்து குடிக்க கொடுக்கலாம்.
வேப்பம் பூவில் துவையல், ரசம் செய்து சாப்பிட்டு வந்தால் பித்தம், குமட்டல், வாந்தி, மயக்கம் குணமாகும். 5 கிராம் உலர்ந்த பழைய வேம்பு காய் 50 மில்லி குடிநீர் விட்டு மூடி வைத்திருந்து, வடிகட்டிச் சாப்பிட்டு வரப் பசியின்மை, உடல் தளர்ச்சி நீங்கும்.