Categories
உலக செய்திகள்

ரஷியா அளித்த மருத்துவ உபகரணங்கள்.. பல உயிர்களை காப்பாற்றும் – அதிபர் ட்ரம்ப்

அமெரிக்காவிற்கு ரஷியா அதிபர் வழங்கிய மருத்துவ உபகரணங்கள், பலரது உயிரை காப்பாற்றும் என அதிபர் ட்ரம்ப் கூறினார்.

உலகையே நிலைகுலைய செய்யும் கொரோனா வைரஸ் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம்  சீனாவில் இருந்து உருவெடுத்தது. இந்த நிலையில் தற்போது அமெரிக்காவில் தற்போது கோரத்தாண்டவம் ஆடி வருகிறது. இந்நாட்டில் தற்போதைய நிலவரப்படி, 2 லட்சத்து 77 ஆயிரத்து 161 பேருக்கு வைரஸ் பரவியுள்ளது. வைரஸ் தாக்குதல் காரணமாக 7 ஆயிரத்துக்கும் 392 பேருக்கு அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.

இந்த தொற்றினால் ஏற்படும் உயிரிழப்புகளை கட்டுப்படுத்த முடியாமல் திணறி வரும் நிலையில் போதுமான அளவு மருத்துவ உபகரணங்கள் இல்லாமல் போராடி வருகின்றனர். இதன் அடிப்படையில் அமெரிக்காவுக்கு உதவுவதற்கு  ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் முன் வந்தார். இதனை அடுத்து ரஸ்யா அதிநவீன மருத்துவ உபகரணங்களை மிக பெரிய சரக்கு விமானம் ஒன்றில் ஏற்றிக்கொண்டு அமெரிக்காவிற்கு கிளம்பியது.

இந்த சரக்கு விமானம் கடந்த வியாழக்கிழமை அன்று அமெரிக்காவில் உள்ள நியூயார்க் நகருக்கு வந்துள்ளது. பிறகு அங்கிருந்து நாட்டின்பல இடங்களில் உள்ள மருத்துவமனைகளுக்கு கொண்டுவரப்பட்டு  மருத்துவ உபகரணங்கள் வழங்கப்பட்டது.

இதை பற்றி வாஷிங்டனில் இருக்கும் வெள்ளை மாளிகையில் நேற்று செய்தியாளர்களை சந்தித்து  டிரம்ப் பேசியதாவது,

ரஷியா அமெரிக்காவிற்கு மருத்துவ உபகரணங்கள் வழங்கியது மிகவும் மனதிற்கு ஒரு நல்ல உபசரிப்பு ஆகும். அதிபர் புதின் செய்த உதவியை ஒரு போதும் மறக்காமல் இருப்பேன் என்றும், உபகரணங்களை வாங்காமல் வேண்டாம் என்று நன்றி என கூறியிருக்கலாம் அல்லது வாங்கிக்கொண்டு நன்றி என கூறியிருக்கலாம் என்றும் அவர் கூறினார்.

புதின் மிகப்பெரிய சரக்கு விமானத்தில் அதிநவீன மருத்துவ உபகரணங்களை அனுப்பியுள்ளது இங்குள்ள பலரது உயிர்களை காப்பாற்றும், ஆகையால், நான் அதை ஏற்றுக்கொண்டேன்’’ எனவும் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |