Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் நாளை இரவு 9 மணிக்கு மின் விளக்குகளை மட்டும் அணையுங்கள் – மின்சார வாரியம்!

தமிழகத்தில் நாளை இரவு 9 மணிக்கு மின் விளக்குகளை மட்டும் அணையுங்கள், மின் சாதனங்களை அணைக்க வேண்டாம் என தமிழ்நாடு மின்சார வாரியம் வேண்டுகோள் விடுத்துள்ளது. அனைத்து மின்சாதனங்களையும் அணைத்து விட்டு ஒரே நேரத்தில் ஆன் செய்தால் மின்சார பிரச்னை ஏற்படும் என பிரதமரின் வேண்டுகோளை ஏற்று மின்சார வாரியம் அட்வைஸ் செய்துள்ளது.

எனவே அனைத்து மின் ஊழியர்களும் தவறாமல் பணியில் இருக்க வேண்டும். 9 நிமிடங்கள் மின்விளக்குகளை அணைப்பதன் மூலம் ஆயிரக்கணக்கான மெகாவாட் மின்சாரம் சேமிக்கப்படும் என்றும் தமிழ்நாடு மின்சார வாரியம் விளக்கம் அளித்துள்ளது.

முன்னதாக நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் டிவிட்டர் பக்கத்தில் வீடியோ வெளியிட்டு பிரதமர் நரேந்திர மோடி நேற்று உரையாற்றியுள்ளார். அதில் கொரோனாவுக்கு எதிராக நாட்டு மக்கள் மஹா சக்தியை உருவாக்க வேண்டும் என்று கூறிய அவர், வரும் நாளை (ஏப்.5ம் தேதி) இரவு 9 மணிக்கு வீட்டு மின்மிளக்குகளை 9 நிமிடங்கள் அணைக்க வேண்டும்.

வீட்டின் நான்கு மூலைகளிலும் ஒளியை பரப்பும் வகையில் டார்ச் அல்லது செல்போன், அகல் விளக்கு, மெழுகுவர்த்தியை ஏற்ற வேண்டும் என தெரிவித்துள்ளார். செல்போன் டார்ச் மூலம் கொரோனோவுக்கு எதிராக வெளிச்சத்தை காட்டுங்கள். கொரோனா எனும் இருட்டை வெளிச்சத்தால் அகற்றுவோம் என குறிப்பிட்டுள்ளார்.

சமூக விலகலை கடைபிடிக்க வேண்டும் – ஒன்று கூடி விளக்கு ஏற்ற கூடாது என்றும் கூறியுள்ளார். கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த ஒளிமயமான காலத்தை கொண்டு வர வேண்டும் என்ற நோக்கத்தில் இதனை செய்ய வேண்டும். வீட்டிலிருந்து அனைவரும் ஒன்றிணைந்தால் மட்டுமே கொரோனாவை கட்டுப்படுத்த முடியும் என கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |