Categories
சினிமா தமிழ் சினிமா

பிரதமர் விளக்கை ஏற்ற சொல்றாறு… சற்று பயமாக தான் இருக்கிறது… ரத்னகுமார் ட்விட்!

பிரதமர் மோடி விளக்கை ஏற்ற சொல்கிறார், சற்று பயமாக தான் இருக்கிறது” என மேயாத மான் இயக்குனர் தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் பிரதமர் நரேந்திர மோடி, நேற்று (ஏப்.3) காலை 9 மணிக்கு காணொலி காட்சி மூலமாக மக்களுக்கு வெளியிட்ட செய்தியில், “ஏப்ரல் 5 ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) நாட்டு மக்கள் அனைவரும் இரவு 9 மணிக்கு 9 நிமிடம் தங்களின் வீடுகளிலுள்ள மின் விளக்குகளை அணைத்துவிட்டு, டார்ச் லைட் அடியுங்கள், அகல் விளக்கு அல்லது மெழுகுவர்த்தி ஏற்றுங்கள்”என்று கேட்டுக்கொண்டார். இதற்கு ஒருபுறம் ஆதரவு இருந்தாலும் மறுபுறம் அன்றைக்கு கைதட்ட சொன்னார்.. இன்றைக்கு விளக்கை அணைக்க சொல்கிறார்.. எதற்கு? என கேள்வி எழுந்தது.

பிரதமர் மோடியின் இந்த வேண்டுகோளை சமூகவலைதளத்தில் மீம்ஸ் கிரியேட்டர்ஸூம் நெட்டிசன்களும் கலாய்த்து வருகின்றனர். இதற்கிடையே இது குறித்து ‘மேயாத மான்’, ‘ஆடை’ ஆகிய படங்களை இயக்கிய ரத்னகுமார் தனது ட்விட்டர் பக்கத்தில் தனது கருத்தை பதிவு செய்துள்ளார்.

அதில், “வாசலில் நின்று கை தட்ட சொன்னதுக்கு தெருவில் கூட்டம் கூட்டமாக நின்று தட்டை தட்டிய மக்களுக்கு, முதலில் வருத்தங்களும், கண்டனங்களும் தெரிவித்திருக்கலாம். இப்போது அடுப்பை பற்ற வைக்க கூட வசதியில்லாத மக்களை விளக்கை ஏற்ற சொல்கிறார். சற்று பயமாக தான் இருக்கிறது” என குறிப்பிட்டுள்ளார்.

இவரின் இந்த ட்வீட்டை நெட்டிசன்கள் பலர் ஆதரவு தெரிவித்து ஷேர் செய்து வருகின்றனர். இயக்குநர் ரத்னகுமார் விஜய் நடிப்பில் வெளியாக உள்ள ‘மாஸ்டர்’ படத்தில் பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |