Categories
தேசிய செய்திகள்

ராஜஸ்தானில் புதிதாக 17 பேருக்கு கொரோனா, ஒருவர் பலி: மொத்த எண்ணிக்கை 196… சுகாதாரத்துறை

ராஜஸ்தான் மாநிலத்தில் இன்று புதிதாக 17 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஜோத்பூரில் மொத்தமாக 5 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. 17 பேரில் 8 பேர் டெல்லியில் தப்லிகி ஜமாஅத் அமைப்பு சார்பில் நடந்த மதக்கூட்டத்தில் பங்கேற்றுள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, ராஜஸ்தானில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை மொத்தமாக 196 ஆக உள்ளது.

டெல்லி மதக்கூட்டத்தில் பங்கேற்றவர்கள் எண்ணிக்கை மட்டும் 41 ஆகும். இன்று காலை மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, இந்தியாவில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,902 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 183 பேர் கொரோனா பதிப்பில் இருந்து குணமடைந்துள்ளதாகவும் சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. மேலும் கொரோனாவால் பலியானோர் எண்ணிக்கை 68 ஆக உயர்ந்துள்ளது.

நாட்டில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதில் இருந்து மக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே செல்வதில்லை. மேலும் விதியை மீறி வெளியே செல்பவர்களுக்கு காவல்துறை அதிகாரிகள் தண்டனை வழங்கி வருகின்றனர். இந்த ஒரு புறம் இருக்க கொரோனா தொற்று நோயால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டே போவது மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |