தமிழகத்தில் கொரோனா பாதித்த 2ஆவது நபர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை ராயப்பேட்டையில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, அரசு மருத்துவமனை கட்டிடங்கள் முழுதும் கிருமிநாசினி தெளிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு முழுவதும் 4500 இடங்களில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டுள்ளது. கொரோனா நோய் தொற்று ஏற்படும் இடங்களை கண்டறிந்து கிருமிநாசினி தெளிக்கப்படுகிறது.
தமிழகத்தில் போர்க்கால அடிப்படையில் கொரோனா பரவாமல் தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அவசர நிலையை உணர்ந்து மக்களும் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். வேகமாக பரிசோதனை செய்வதற்கான கிட்டுக்கள் ஆடர் செய்யப்பட்டுள்ளன. தமிழகத்தில் கொரோனாவுக்கு இரண்டாவது பலியா என்ற கேள்விக்கு அரசு சார்பில் அதிகாரபூர்வ பதில் வரும் என்று அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.
முன்னதாக டெல்லி மாநாட்டில் பங்கேற்ற 51 வயது ஆண் விழுப்புரம் மருத்துவக்கல்லூரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று இரவு (03.04.20) அதிகமாக மூச்சுத்திணறல் ஏற்பட்டு இன்று காலை 7.44 மணிக்கு உயிரிழந்தார். இது குறித்த கேள்விக்குத்தான் அமைச்சர் விஜயபாஸ்கர் விரைவில் அரசு சார்பில் அறிவிப்பு வரும் என்று தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.