Categories
உலக செய்திகள் கால் பந்து விளையாட்டு

கொரோனா பரவல்…U-17 மகளிர் உலக கோப்பை கால்பந்து தொடர் ஒத்திவைப்பு…பிபா அறிவிப்பு

வேகமாக பரவி வரும் கொரோனோவால், இந்த ஆண்டு இந்தியாவில் நடைபெற வேண்டிய மகளிர் உலகக்கோப்பை கால்பந்து தொடர் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

நம் நாட்டில் வருகின்ற நவம்பர் 2ம் தேதி முதல் 21ம் தேதிவரை 17 வயதிற்கு உட்பட்டவர்கள் மட்டும் பங்கேற்கும் இந்த மகளிர் உலகக்கோப்பை கால்பந்து தொடரை நடத்துவதற்கு திட்டமிடப்பட்டிருந்தது. இதனுடைய அட்டவணையை சர்வதேச கால்பந்து சம்மேளனம் (பிபா) வெளியிடப்பட்டிருந்தது. இப்போட்டியில் பங்கேற்கும் அனைத்து அணிகளும் தீவிரமாக பயிற்சியில் ஈடுபட்டு வந்தனர்.

இந்த நிலையில் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக திட்டமிட்டபடி போட்டியை  நடத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் போட்டியை ஒத்திவைக்க வேண்டும் என்று நிர்வாகக்குழுவுக்கு பரிந்துரை செய்யப்பட்டது. இதை அடுத்து போட்டி ஒத்திவைக்கப்படும் என்று பிபா  அறிவிப்பு வெளியிட்டது. இப்போட்டிக்கான புதிய அட்டவணை பிறகு வெளியிடுவோம் என்றும் அறிவித்துள்னர்.

இதை அடுத்து எதிர்காலத்தில் நடைபெற விருந்த சர்வதேச போட்டிகள் (ஜூன் 2020 வரை) மற்றும் யு-17 மற்றும் யு-20 மகளிர் உலகக் கோப்பை உள்ளிட்ட அனைத்து பிபா போட்டிகளையும் ஒத்திவைக்க முடிவு எடுத்துள்ளனர். மேலும், 2022 உலகக் கோப்பை தகுதிப் போட்டிகளுக்கான திருத்தப்பட்ட அட்டவணை குறித்து, கூட்டமைப்புகளுடன் கலந்துரையாடவும் முடிவு செய்யப்பட்டது.

 

Categories

Tech |