கொரோனா நோய் தான் நம்முடைய எதிரியே தவிர, கொரோனா நோயாளி இல்லை என்று திமுக தலைவர் முக.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கையை ஒட்டுமொத்த இந்திய நாடும், ஒருமித்த கருத்தோடு இணைந்து செயல்பட்டு வருகிறது. மத்திய அரசு 21 நாள் ஊரடங்கு உத்தரவை அமல்படுத்திய நிலையில் அனைத்து கட்சிகளும் ஒரே அணியில் இருந்து ”யாரும் வீட்டை விட்டு தேவையில்லாமல் வெளியே வரவேண்டாம், அரசு சொல்வதை கேட்போம்” என்ற பல்வேறு அறிவுரைகளையும், ஆலோசனைகளை சொல்லி வருகின்றார்கள்.
மாநில முதல்வர்களாக இருக்கட்டும், மாநில எதிர்க்கட்சிகளாக இருக்கட்டும் அனைவரும் ஒருமித்த கருத்தோடு, கொரோனாவுக்கு எதிராக மக்களுக்கு ஆலோசனை வழங்கி வரும் நிலையில் திமுக தலைவர் மு க ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ பதிவில் இதுகுறித்து வெளியிட்டிருந்தார்.
கொரோனா காலத்தில் அரசியல் செய்யாமல் சமூகப் பேரிடரைச் சரி செய்வீர்! #TNFightsCorona https://t.co/HzysoPS0jG
— M.K.Stalin (@mkstalin) April 4, 2020
அதில், கொரோனா நோய் தான் நம்முடைய எதிரியே தவிர, கொரோனா நோயாளி எதிரி அல்ல. ஒற்றுமையால் தான் எதையும் வெல்ல முடியும். பிரிவினையால் எதையும் வெல்ல முடியாது. துயரமான நேரத்தில் மக்களின் உயிரை பணயமாக வைத்து மலிவான அரசியல் செய்வோரை ஒதுக்கித் தள்ளுங்கள். சாதி, மத அடிப்படையில் நம்மை பிளவுபடுத்த யாரையுமே அனுமதிக்காதீர்கள் என வீடியோ மூலம் தெரிவித்துள்ளார்.