Categories
குழந்தை வளர்ப்பு லைப் ஸ்டைல்

கொரோனா- கர்ப்பிணி பெண்கள் இவ்வாறு செயல்படுங்கள்..!!

கொரோனா காலத்தில் கர்ப்பிணி பெண்கள் எவ்வாறு இருக்க வேண்டும்..!

இதுவரைக்கும் கர்ப்பிணி பெண்கள் கொரோனாவால் இதுவரை பெரியதாக பாதிக்கப்படவில்லை என்றாலும், கட்டாயமாக நல்ல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் இந்த காலத்தில் எடுப்பது அவசியம். நல்ல ஆரோக்கியமான உணவு, நிறைய தண்ணீர், விட்டமின் சி நிறைந்த பழங்கள், காய்கறிகள், முறையான நடைபயிற்சி எடுக்க வேண்டும்.

அதுமட்டுமில்லாமல் நாம் முறையாய் கைகளை கழுவுவதும், கைகளைக் அடிக்கொரு முறை முகத்திற்கு கொண்டு போகாமல் இருப்பதும் அவசியமான ஒன்று. நம் பாரம்பரியத்தில் வளைகாப்பு விசேஷங்கள்,  வீட்டிற்கு தேடிவந்து இனிப்புகள் கொடுப்பதும் நடந்து கொண்டுதான் இருக்கும். இந்த சமயத்தில் இந்த மாதிரி கூட்டங்களை தவிர்த்துக்கொள்வது ரொம்பவே நல்லது.

கர்ப்ப காலத்திலோ, பிரசவத்தின் போது, குழந்தைக்கும் கொரோனா பரவுமா.? இது வரைக்கும் எந்த ஆதார பூர்வமாக நிரூபிக்கப்படவில்லை. அப்போது தாய்ப்பால் கொடுக்கலாமா.? தாய்ப்பால் மூலம் அக்குழந்தைக்குப் நோய் எதிர்ப்பு சக்தி நன்றாகவே கிடைக்கும் என்பதால், குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்க வேண்டும்.

அந்த சமயத்திலும் கைகளை கழுவிவிட்டு, மாஸ்க் போட்டு தான் குழந்தையை தொடவேண்டும். குழந்தைக்கான தடுப்பூசி வழிமுறையாக போட்டுக் கொள்ள வேண்டும்.

Categories

Tech |