நாளை முதல் அத்தியாவசிய தேவைகளுக்கான பொருட்களை விற்கும் கடைகள் காலை 6 மணி முதல் பகல் 1 மணி வரை மட்டுமே செயல்பட வேண்டும் என முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
கொரோனா பாதித்தோருக்கு சிகிச்சை அளிக்க தனியார் மருத்துவமனைகளுக்கும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த அவர், தமிழகத்தில் 110 தனியார் மருத்துவமனைகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாகவும், சென்னையில் அதிகபட்சமாக 11 தனியார் மருத்துவமனைகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது என்றும் தகவல் அளித்துள்ளார்.
நோய் தொற்று இருப்பவர்கள் வரையறுக்கப்பட்டுள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று கொள்ளலாம் என கூறப்பட்டுட்டுள்ளது. நாளை முதல் அத்தியாவசிய தேவைகளுக்கான பொருட்களை விற்கும் கடைகள் காலை 6 மணி முதல் பகல் 1 மணி வரை மட்டுமே செயல்பட வேண்டும் என முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். முன்னதாக காலை 6 மணி முதல் 2.30 மணி வரை செயல்பட அனுமதி அளிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் பொதுமக்கள் சமூக இடைவெளியை பின்பற்றாமல் இருந்தனர். மேலும் பொதுமக்கள் வெளியே வருவது அதிகரித்துள்ளதால் இந்த முக்கிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தேவையின்றி வெளியே வருபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 311ஆக அதிகரித்து நிலையில் பல்வேறு முக்கிய அறிவிப்புகள் வெளியாகி வருவது குறிப்பிடத்தக்கது.