Categories
தேசிய செய்திகள்

தப்லீக் ஜமாஅத் தொழிலாளர்கள், அவர்களின் தொடர்புகள் என 22,000 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்!

டெல்லி நிஜாமுதீனில் தப்லீக் ஜமாத் அமைப்பின் தொழிலாளர்கள் மற்றும் அவர்களின் தொடர்புகள் என மொத்தம் 22,000 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என மத்திய உள்துறை அமைச்சகத்தின் இணை செயலாளர் புண்யா சலிலா ஸ்ரீவாஸ்தவா தெரிவித்துள்ளார். இன்று காலை மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,902 ஆக உயர்ந்துள்ளது.

மேலும் 183 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளதாகவும் சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. மேலும் கொரோனாவால் பலியானோர் எண்ணிக்கை 68 ஆக உயர்ந்துள்ளது. மேலும், நாட்டில் கொரோனா பாதிப்பு அதிவேகமாக பரவியதற்கு காரணம் டெல்லியில் நடந்த மதக்கூட்டமும் ஒரு காரணமாக தான் திகழ்கிறது. தப்லீகி ஜமாத் எனும் இஸ்லாமிய பிரசார அமைப்புக்கு சொந்தமான மர்கஸ் மசூதி ஒன்று டெல்லியின் நிஜாமுதீன் பகுதியில் அமைந்துள்ளது.

இங்கு கடந்த சில வாரங்களுக்கு முன்பு (மார்ச் 8,9,10 உள்ளிட்ட தேதிகளில்) மதக்கூட்டம் நடைபெற்றுள்ளது. இதில், இந்த நிகழ்ச்சியில், மலேசியா, இந்தோனேசியா, தாய்லாந்து, நேபாளம், மியான்மர், கிர்கிஸ்தான் மற்றும் சவுதி அரேபியா ஆப்கானிஸ்தான், அல்ஜீரியா, ஜிபூட்டி, இலங்கை, பங்களாதேஷ், இங்கிலாந்து, பிஜி, பிரான்ஸ் மற்றும் குவைத் ஆகிய நாடுகளிலிருந்து 250க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் இந்த நிகழ்வில் பங்கேற்றிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், தமிழகத்தில் இருந்து 1,500 பேரும், கர்நாடகா, தெலங்கானா, காஷ்மீர் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்தும் கலந்து கொண்டுள்ளனர். அதில், மதக்கூட்டத்தில் பங்கேற்ற வெளிநாட்டினர் தமிழ்நாடு, தெலங்கானா, பிஹார் உள்ளிட்ட மாநிலங்களில் செயல்படும் இந்த அமைப்பின் கிளைகளுக்கு சென்றதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், நிஜாமுதீன் பகுதியை சுற்றிவளைத்த போலீசார் அங்கிருந்தவர்களை மருத்துவமனையில் அனுமதித்தது. மேலும், கூட்டத்தில் பங்கேற்றவர்கள் கண்டறிந்து வருகிறது.

Categories

Tech |