கொரோனா தொற்று அனைவரையும் தாக்கக்கூடியது என்பதால் மதச்சாயம் பூசுவதை அனைவரும் தவிர்க்க வேண்டும் என முதல்வர் பழனிசாமி கூறியுள்ளார். அரசின் நடவடிக்கைக்கு முழு ஒத்துழைப்பு தருவதாக மதத்தலைவர்கள் ஒப்புதல் அளித்துள்ளதாக தெரிவித்த அவர், மதம் சார்ந்த கூட்டங்களை தவிர்த்து சமூக விலகலை கடைபிடிக்க வேண்டுகோள் விடுத்துள்ளார்.
நோய்த்தொற்று உள்ளவர்களுக்கு சிகிச்சை அளிக்க தனியார் மருத்துவமனைகளுக்கு அறிவுரை வழங்கப்படுள்ளதாகவும் முதல்வர் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் 110 தனியார் மருத்துவமனைகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாகவும், சென்னையில் அதிகபட்சமாக 11 தனியார் மருத்துவமனைகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது என்றும் தகவல் அளித்துள்ளார்.
நோய் தொற்று இருப்பவர்கள் வரையறுக்கப்பட்டுள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று கொள்ளலாம் என கூறப்பட்டுட்டுள்ளது. மேலும் நாளை முதல் அத்தியாவசிய தேவைகளுக்கான பொருட்களை விற்கும் கடைகள் காலை 6 மணி முதல் பகல் 1 மணி வரை மட்டுமே செயல்பட வேண்டும் என முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். விதிமுறைகளை மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் எச்சரித்துள்ளார்.