Categories
தேசிய செய்திகள்

கேரளாவில் கள்ளச்சாராயம் காய்ச்சிய 7 பேர் கைது… 200 லிட்டர் சாராய மூலப்பொருள்கள் பறிமுதல்!

கேரளாவில் சாராயம் காய்ச்சிய 7 இளைஞர்கள் கைது செய்யப்பட்டு, அவர்களிடமிருந்து 280 லிட்டர் சாராயம் தயாரிக்கும் மூலப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது.

கொரோனா அச்ச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் கேரள மாநிலத்தில் கள்ளத்தனமாக சாராயம் காய்ச்சி விற்பனை செய்து வருவதாக கலால்துறை அலுவலருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இந்த தகவலின் பேரில் சம்பந்தப்பட்ட இடங்களுக்கு சென்று கலால் அலுவலர் சுமேஷ் ஜேம்ஸ் தலைமையில் அலுவலர்கள் சோதனை நடத்தினர்.

சோதனையில் ஆலப்புழா மாவட்டத்திலுள்ள ஒரு மறைவான இடத்தில் வைத்து சாராயம் காய்ச்சியது தெரியவந்தது. இதையடுத்து அலுவலர்கள் அங்கிருந்த இளைஞர்கள் 4 பேரையும் கைது செய்து, அவர்களிடம் இருந்து 200 லிட்டர் சாராய மூலப்பொருளை பறிமுதல் செய்தனர். இதே போல தான் கடந்த சில தினங்களுக்கு முன் 80 லிட்டர் சாராய மூலப் பொருட்களை பறிமுதல் செய்த அலுவலர்கள் அங்கிருந்த மூவரையும் கைது செய்தனர்.

கேரளாவில் மொத்தம் 29.8 லட்சம் ஆண்களும், 3.1 லட்சம் பெண்களும் மது அருந்துகிறார்கள் என்று புள்ளி விவர தகவல்கள் தெரிவிக்கிறது. தினந்தோறும் 5 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் மது குடிக்கின்றனர். அம்மாநிலத்தில் மதுவுக்கு அடிமையாகி இருக்கும் 83 ஆயிரத்து 851 பேரில் ஆயிரத்து 43 பேர் பெண்கள் ஆவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |