கொரோனா வைரஸ் தாக்கத்தால் உலகளவில் சுமார் 200க்கும் மேற்பட்ட நாடுகள் கதிகலங்கி உள்ளன. இதுவரை கொரோனா நோய் வைரசால் பாதிக்கப்பட்டவர்கள் உலகளவில் 1,133,815 ஆக உள்ளது. இதுவரை நேர்ந்த உயிரிழப்புகள் 60,398 ஆக அதிகரித்துள்ளது. நோய் பதிப்பில் இருந்து குணமடைந்தவர்கள் 236,008 பேர் ஆகும். உலகையே உலுக்கி வரும் கொரோனா தற்பொழுது அமேசான் காடுகளில் வாழும் மக்களிடமும் பரவ தொடங்கியுள்ளது.
சுகாதாரப்பணியாளராக செயல்பட்டு வரும் 20 வயது பெண் ஒருவருக்கு கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டிள்ளதால் காடுகளில் வாழும் மற்றவர்களுக்கும் பரவும் அச்சம் நிலவி வருகிறது. இந்த நிலையில் கொரோனா வைரஸ் பரவாத நாடுகளும் சில மிச்சமுள்ளன. வடக்கு பசுபிக் கடற்கரையில் பாலக் மொழி பேசும் சுமார் 18,000 மக்கள் தொகை கொண்ட சிறிய நாடான பலாவ் தீவில் இதுவரை ஒருவருக்கு கூட கொரோனா தோற்று பாதிப்பு ஏற்படவில்லை.
சுமார் 1 லட்சம் மக்கள் தொகை கொண்ட ஆபிரிக்க நாடான டோங்கா என்ற பகுதியும் கொரோனா பிடியில் சிக்கவில்லை. சாலமன் தீவுகள், மார்ஷல் தீவுகள், மெக்ரோனேசியா ஆகிய நாடுகளிலும் கொரோனா பாதிப்பு ஏற்படவில்லை. வடகொரியாவில் இதுவரை ஒருவருக்கு கூட கொரோனா தோற்று உறுதி செய்யப்படவில்லை. அதேசமயத்தில் பசுபிக் கடலில் உள்ள வடக்கு மரியானா தீவில் முதன்முறையாக ஒருவருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. பயண கட்டுப்பாடுகள் இருப்பதால் தான் கொரோனா பரவவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.