நாடாளுமன்றத் தேர்தலில் இந்திய மக்கள் அனைவரும் வாக்கினை செலுத்தி இம்முறை நூறு சதவீதம் வாக்கு கொடுத்து விட்டோம் என்ற நிலையை கொண்டுவர வேண்டிய பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் பிரபல நடிகர்கள் மற்றும் இந்திய மக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்
நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு பல்வேறு இடங்களில் வாக்களிப்பதற்கான விழிப்புணர்வு பிரச்சாரம் என்பது நடைபெற்றுக்கொண்டு இருக்கிறது இதனை தொடர்ந்து பல்வேறு சமூக இயக்கங்கள் இது குறித்து விழிப்புணர்வை மக்களிடத்தில் ஏற்படுத்தி வருகின்றனர் வாக்களிப்பது குறித்த முக்கியத்துவத்தையும் மக்களிடையே எடுத்து கூறி வருகின்றனர்
இதனை தொடர்ந்து பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் தானே முன்வந்து மக்களிடம் வாக்களிப்பது குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார் அவர் சமீபகாலமாக தொடர்ந்து அவரது டுவிட்டர் பக்கத்தில் வாக்களிப்பின் முக்கியத்துவம் குறித்தும் வாக்கு அளிப்பதற்கான அவசியம் குறித்தும் தொடர்ந்து பதிவிட்டு வருகிறார் மேலும் அவர் குறிப்பிட்டதாவது ,
வருகின்ற மக்களவைத் தேர்தலில் இந்தியா முழுவதும் மக்கள் நூறு சதவீதம் வாக்கு அளிக்க வேண்டும் என்று அவர் கூறியிருந்தார் மேலும் மக்களவை தேர்தல் ஆனது இந்தியா முழுவதும் ஏழு கட்டங்களாக நிகழ உள்ளது அதில் வாக்களிக்க வேண்டியது நமது உரிமை மட்டுமல்ல நமது தலையாய கடமையும் கூட என்று அவர் பதிவிட்டு இருந்தார்
மேலும் பாலிவுட் நடிகர்கள் இந்த வாக்குரிமை குறித்த விழிப்புணர்வை மக்களிடையே அதிகம் கொண்டு சேர்க்க வேண்டும் என்று அவர்களிடையே வேண்டுகோள் விடுத்துள்ளார் மேலும் அரசியல் கட்சி தலைவர்களான மு க ஸ்டாலின் காங்கிரஸ் கட்சித் தலைவரான ராகுல் காந்தி மம்தா பானர்ஜி உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்கள் 100 சதவீத வாக்கினை உறுதிப்படுத்த வேண்டும் என்றும் சல்மான் கான் ஷாருக்கான் தீபிகா படுகோன் மோகன்லால் உள்ளிட்ட பிரபல நடிகர்கள் மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்றும் ஆன்மீக தலைவர்களான குரு ராம்தேவ் ஆகியோரிடமும் வாக்கின் முக்கியத்துவம் குறித்து பேசுமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார்